வெள்ளி, 31 டிசம்பர், 2010

கடவுளே உன்னிடம் ஒரு நிமிடம்!

கடவுளே ஒவ்வொரு மனிதனின்
செயலுக்கும் காரணம் நீ தான் !
அவன்  இந்த ஜென்மத்தில்
என்ன நல்ல காரியம் செய்கின்றான்
என்னென்ன பாவங்கள் புரிகின்றான்
என்பதை வைத்தே அவனுடைய
விதி என்று சொல்லப்படுகிற உன்னுடைய
லீலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் .

உன்னுடைய  கணிப்பு அனைத்தும்
மனிதன் அவனுடைய முன் ஜென்மத்தில்
அவனவன் செய்த பாவ புண்ணியத்தை
வைத்தே நீ கணக்கிடுவதாக
எல்லோரும் சொல்ல கேள்வி!
உண்மையிலேயே  இந்த அடிப்படையை
கொண்டு தான் நீ உன் செயல்களை
நடத்துகிறாய் என்றால் கடவுளே
உன்னிடம் ஒரு நிமிடம்!

உன்னுடைய அனுமதியோடு
உனக்கு ஒரு யோசனை
மனிதனின் முன் ஜென்மம்
என்ற ஒன்றை யாரும்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை !
அதை யாரும் நான் போன
ஜென்மத்தில் இப்படி இருந்தேன்
அப்படி இருந்தேன் என்று
உணர்ந்து சொன்னவர்கள் இல்லை
அப்படி இருக்கும் பொழுது
அவனின் முன் ஜென்மத்தை
வைத்து இந்த ஜென்மத்தில்
அவனுடைய வாழ்க்கை அமையக்கூடாது !

இந்த ஜென்மத்தில் அவன்
செய்கின்ற பாவ புண்ணியத்தை
வைத்து அவனுக்கு வாழ்க்கையை
நீ அமைத்தால் தான்
மனிதனுக்கு உன்னிடத்தில் மரியாதையுடன்
கூடிய பய பக்தி  இருக்கும்.
அப்பொழுது தான் மனிதனுக்கு
வாழ்க்கையில் தவறு ஏதும்
செய்யாமல் தான் இருக்கும்
வரை நல்லதை செய்வார்கள்.

பணத்துக்காக மானத்தை விட்டு
இழி செயலில் ஈடுபட்டு
சம்பாரிக்கும் ஆண்களுக்கும் உன்
மேல் பயம் வரும் .
மனிதனுக்கு மனிதன் பே(வே)தம்
பார்க்காமல் மனிதனை மனிதனாக
நடத்துவதற்கு முயல்வார்கள்.
மனமறிந்து பிறர்க்கு கெடுதல்
செய்பவர்களை கடவுளே அவர்களை
நீ இந்த பூமியில் விட்டு வைக்காதே !
உடனே அவர்களுக்கு உயர்
பதவி கொடுத்து வானுலகத்திற்கு
அனுப்பி வைத்து விடு !
அப்பொழுது தான் உன்மேல்
மக்களாக பிறந்தவர்களுக்கு நம்பிக்கை
ஏற்பட்டு உன்னை நம்புவார்கள் .
நீ(கடவுள்) மக்களுக்கு மட்டும் தான்
உரியவனாக இருக்கவேண்டுமே தவிர
மாக்களாக வாழ்பவர்களுக்கு  அல்ல!

செவ்வாய், 14 டிசம்பர், 2010

இப்படியும் வாழலாமே !

முட்களாய் தான் இருக்கின்றன நா(ம்)ன்
செல்கின்ற எல்லா சாலைகளும் அதற்காக
வருத்தப்படவில்லை ......... மாறாக
என் கால்களை நானே இரும்பாக
பக்குவப்படுத்(தி)த பழகிக்கொண்டேன் ! .                                                                                                                                                                                             
உனக்கென்று  ஒரு சரியான 
பாதையை வகுத்துக்கொள்
உயிரே போவதாக இருந்தாலும்
சற்றும் அதிலிருந்து விலகாமல்
இருந்து விடு  இல்லையேல்   இறந்து விடு!

நேர்மை தவறி தவறான வழியில்
பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களே
ஒரு நிமிடம் கர்மவீரர் காமராஜரை
நினைத்து பாருங்கள் உண்மையிலேயே
மனசாட்சி இருந்தால்  திருந்திவிடுவீர்கள்.

அமில மழை போன்ற நயவஞ்சகர்களின்                 
அசுத்தமான வார்த்தைகள்  என் வாழ்வெனும்
குடைதனை பொசுக்கின ..... இருந்தும்
ஒவ்வொரு துளியின் இடைவெளியிலும்
நுழைந்து  நல்லவனாகவே  வெளியில் வந்தேன் !

                                                                  
நல்லவனாக வாழ்வது கடினம் போல
தோன்றும் ஆனால் இரவில் நீ
தூங்குவதற்கு முன் நினைத்து பார்!
அதனுடைய  மகத்துவம்  புரியும்,
உன்மேல் உனக்கே மரியாதை வரும் .

அப்படி ஒன்றும் மிகவும்
எளிதானதல்ல ... வாழ்க்கை வாழ்வதற்கு 
அப்படி ஒன்றும் மிக மிக
கடினமுமல்ல... வாழ்க்கையை வாழ்வதற்கு 
உன்னுடைய நன்னடத்தை தான் வாழ்க்கை!.....

மனிதா!  நீ  சாவதற்குள்
ஒரு நாளேனும் நல்லவனாக
இருந்து பார்!  அதுவும் நீ உன் சுய நினைவில்
இருக்கும்போது... அப்போது தான்
 நீ இந்த பூமியில் வந்து பிறந்ததற்கான
அர்த்தத்தை உணர்ந்து கொள்வாய் ! !....

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

(அரிமா) நட்பின் மாண்பு

அரிமா என்றாலே சேவை எனும் 
நீரை எல்லோருக்கும் வாரிவழங்குவதில்
எப்படி  எல்லோருக்கும் கொடுப்பதனால்
குறையாத அந்த கடலை போன்றவர்கள் !
நாம் இங்கு காணவிருப்பதோ
அந்த பெருமைக்குறிய நம் அரிமா
நண்பர்களின் நட்பின் மாண்பு
பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வையே !நண்பர்களில் எல்லோரும் சந்தோசமாக 
இருக்கிறார்கள் என்பதை விட 
எவர் ஒருவருமே வருத்தப்படவில்லை 
என்பதே மிகச் சிறந்த ஒன்றாகும் 
போட்டி இருக்க வேண்டும் 
அது பொறாமை இல்லாத 
சேவை ஒன்றையே  அடிப்படையாக 
கொண்டு அமைய வேண்டும் 


ஆராய்தல் வேண்டும் நட்புக்கு  முன்பு  
ஆராய்ச்சி கூடாது நட்புக்கு  பின்பு 
இது சாதாரணமாக   நட்புக்குரியது 
இந்த வசதி கூட நம்
அரிமா நண்பர்களுக்கு கிடையாது !
விட்டுக்கொடுத்தவர்கள் தாழ்வதுமில்லை
விட்டுக்கொடுக்காதவர்கள் தாழ்ந்த்தவருமில்லை 


பாசமது மிகுந்து விட்டால் 
கோபமது சற்று பாசத்தினை       
எப்போதாவது மறைத்திருக்கும்
எப்படி மரக்கிளை கனியை 
மறைத்திருக்குமோ அது போல 
பாசமெனும் கனியை கோபமெனும் 
கிளைகள் மறைக்கும் பொழுது 
காற்று எனும் பெருந்தன்மையினால் 
கோபமெனும் கிளையை விலக்கினாள்
பாசமெனும் கனியும் தெரியும் 
அதன் தன்மையும் புரியும்! 


பெண் பெற்றதனால் தாயாகிறாள் 
நாம் பிறந்ததனால் சேயாகிறோம்
அரிமாவில் நாம் இடம்
பெற்றதனால் தாயானோம் 
மற்ற நண்பர்களை பெற்றதனால் 
அனைவரும் நமக்கு சேயானார்கள்
ஒவ்வொருவரின் மனநிலையும் 
இப்படித்தான்  இருக்கவேண்டும் !


எப்படி தாய்க்கும் சேய்க்கும் 
இடையே எந்தவித எதிர்பார்ப்பும் 
இல்லாத அன்பும், பாசமும், 
அரவணைப்பும,பரிவும் ஏற்படுகிறதோ
இவற்றைப்போல நம் அரிமா 
நண்பர்களின் நட்பும் இருக்கவேண்டும் 
இவ்வாறு இருந்துவிட்டால் ஒருபோதும் 
இருக்காது கருத்து வேற்றுமை 
எனும் வேறுபாடு !


அரிமா நண்பர்களிடையே
பார்க்கக் கூடாதது கெளரவம்
நம்மில் சற்று குணம் குறைந்தவர்கள் 
இருக்கும் பட்சத்தில் 
அவர்களை ஒதுக்காமல்(தள்ளி வைக்காமல்)  
 உதாரணத்திற்கு எப்படி நாம் வாழ்க்கையில் 
வாசனைபூக்களிடையே வாசனை அற்ற
பூக்களையும் பயன்படுத்துகிறோமோ அது போல  மேலும் 
தாமரை இலை  தண்ணீரிலேயே இருந்தாலும் 
எப்படி ஒட்டியும் ஒட்டாமலும் 
இருக்கின்றதோ அதுபோல 
பகைமை பாராட்டாமல் 
வாழக்கற்றுக்கொண்டால் எப்போதும் 
நண்பர்களிடையே மிஞ்சுவது சந்தோசம் 
மட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை!
----------------------------------------------------------------------அன்பே நியாயமா?

உன்னில்   என்னை 
காணும்   எண்ணம்  
உனக்கு   வேண்டும்                             
என்று   சொன்னது 
நான்   தான்!

     அதற்காக 

நான்  இருக்கும்போது 
நீ    எதற்கு 
என்று    நீ 
என்னை   மடியச்சொல்வது 
நியாயமா !

சனி, 30 அக்டோபர், 2010

இக்கால முற்றும் துறந்த ஞானிகள் !

முன்னொரு காலத்தில் மனிதனில் ஒரு சிலர், சிறிது  காலம் வாழ்ந்து பின்னர் வாழ்வுதனை வெறுத்து முற்றும் துறந்து மெய் ஞானி என்று தன்னை  (ஏ)மாற்றிக்கொண்டு வாழ்ந்தவர்கள் சிலரும் உண்டு.  தற்கால கணினி உலகத்திலும் சற்றும், கொஞ்சமும், துளியும் அனைவரும் வியக்கதகாத அருவருப்பான வகையில் பல முற்றும் துறந்த ஞானிகளும் வீ (வா)ழ்ந்து   கொண்டுதான் இற(ரு)க்கிறார்கள்.

பணம் ஆம் அதுதான் வாழ்வாதாரம் என எண்ணி அந்த காகிதத்தின் மேல் உள்ள மோகத்தினால் முற்றும் துறந்து விடுகிறார்கள். அவைகள் மா.., ஈ.., வெ..., சூ., சொ...  காரணம் இவைகள் அனைத்தையும் தன் வாழ்க்கையில் அவர்கள் கேள்வி படாத ஒன்றாகும்.  பாவம் அவர்களை அறியாமலேயே து(இ)றக்கிறார்கள்.

பணம், பாசம் இவை இரண்டும் ஒரு பாதையில் செல்வதில்லை.  பணத்தின் வலி வேறு, பாசத்தின் வழி வேறு  அது   ஆல விழுதின்  வேர்(று). பாசத்தை உள்ளத்தளவிலே வைத்திருப்பவர்களுக்குத் தான் அதனுடைய அருமை புரியும்.  ரயிலின் இரு வேறு பாதைகளை போல பணமும் பாசமும் அருகருகே நீண்ட தூரம் சென்றாலும் குறிப்பிட்ட இடைவெளி விட்டு எப்படி என்றுமே ஒன்று சேராதோ அதுபோல பணமும் பாசமும் வாழ்க்கையில் எப்பொழுதும் ஒன்று சேராது என்பதே சத்தியமான உண்மை.

பணம் என்றால் சாதாரணமாக வேலைக்குசென்று மாத சம்பளமோ, தின கூலியோ, அல்லது தொழில் அதிபர்களோ நேர்மையான முறையில் தனக்கென்ன கிடைக்கிறதோ அதை மட்டும்  பெற்று வாழ்பவர்களை குறிப்பிடவில்லை. பணத்தின் மேல் பற்று, பாசம் என்று யாரை சொல்கிறோம்.  மேற்கண்ட நபர்களின் வருமானத்திற்கும் அப்பால் மேலே சொன்ன  மா.., ஈ.., .....    மற்ற அனைத்தையும் துறந்து அதனை பாவம்
க(இ)ஷ்டப்பட்டு அனைவரிடமும் இ(ரு)ரந்து தன் நிலை இல்லா வாழ்க்கைதனை உயர்த்த பல அடுக்கு மாடிகள் கட்டி. சொகுசு வாகனங்களை வாங்கி இ(ற)ருப்பார்கள்.
இது மாதிரி பணத்தின்மேல் மோகம் கொண்டு வெறித்தனமாக அதனை சேகரிக்கும் மனிதனில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இவர்களுக்கு நீங்களே ஏதாவது ஒரு பெயரை வைத்து கொள்ளுங்கள். தயவுசெய்து விலங்குகளின் பெயர்களை  வைக்காதீர்கள், பாவம் அந்த ஜீவராசிகள்  மனதளவில் வேதனைப்படும்.  மேற்கண்ட பணத்திற்கு ஆளாய் பறக்கும் பிரகஸ்பதிகள் அனைவரும் ஆண்டவன் கையில் உள்ள உயரே பறந்து கொண்டிருக்கும் பட்டங்கள் ஆவார்கள்.  இது போன்ற பட்டத்தை ஆண்டவன் மிக உயரே நாம் அனைவரும் வியந்து பார்கதக்கவகையில் பறக்க விட்டு கொண்டே இருப்பான்.  குறுகிய காலத்திற்கு பிறகு ஆண்டவன் சற்றே பட்டத்தை சுண்டி (இழுத்து) விடுவான்.  அப்போது பட்டம் தலைகீழாக    கீழ் நோக்கி வந்து பிறகு மேல் எழும்பும்.  அப்போது பட்டத்தை அதாவது அந்த பிரகஸ்பதியை நம்பி வாழும் அனைவரும் என்ன ஆவார்கள் என்பதை நாமும் சரி மேற்கண்ட பட்டமும் சரி எண்ணி பார்க்கவே முடியாது

யாருக்காக அந்த பட்டம் உயர உயர பறந்ததோ அவை அனைத்தையும் இழந்து பின்னர் தனிமரமாக  பறக்க வேண்டிய நிலை ஏற்படும்.    ஆண்டவனின் கணக்கை யாரால் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் என்னவோ அவன்  பட்டத்தை விடாமல் இறுக்கி பிடித்து கொள்வான்.  ஆனால் அந்த பட்டமே ஒரு சில நாட்களில் ஆண்டவன்  கையில் இருந்து விடுபட்டு தானாகவே தன்னை அழித்துக்கொள்ளும்.  பணத்தின் பயனால் அதிகபட்சம் என்ன முடியும் என்பதை நம்மால் ஒரிரு  வார்த்தைகளில்  கூறிவிட  முடியும்.

ஒன்று - வெயில் காலத்தில் குளிர் சாதனம்
                  குளிர் காலத்தில் வெப்ப சாதனம்
 இரண்டு - உயர பறக்க ராக்கெட்
                    கடலுக்கு அடியில் செல்ல நீர் மூழ்கி கப்பல்
மூன்று  - பல விதமான சத்தான உணவுகள் - அதுவும்
                   சர்க்கரை  வியாதி இல்லாமல் இருந்தால் தான்!
                    இருந்துவிட்டால் பிறகு என்ன கஞ்சி காய்ச்சி விடுவார்கள் !
                    பயப்படவேண்டாம்  உங்களை அல்ல நீங்கள் சாப்பிடுவதற்கு .
                    

இவை அன்றி வேறதும் இவர்கள் கண்டிலர்.  இது போன்ற பிரகஸ்பதிகள் மண்ணில் வாழ்ந்து கொண்டு இருப்பதாக எண்ணி வாழும் போதே இறந்து கொண்டு இருப்பவர்கள்.  இவர்களுக்காக நாம் ஆழ்ந்த பரிதாபமெனும் அஞ்சலியை செலுத்துவோம்  அவர்கள்  இப்பூமியிலே வீ (வா)ழும்  போதே.


 

சனி, 4 செப்டம்பர், 2010

மனதில் நிறுத்துவதற்கு சில !

தாய் தந்தையை  காப்பாற்று
உடன் பிறந்தோர்க்கு செய்வதற்கு
துளியும் யோசிக்காதே !
மனைவி, மக்களை நேசி
உண்மையான நண்பர்களை தேர்ந்தெடு
நம்பிக்கையுடன் பழகு !
நன்றி மறவாதே

ஒரு வேளை உணவிட்டாலும்
அவர்களை உன் உயிர்
உள்ளவரை மறவாதே !
காட்டிக் கொடுக்காதே
பொய் சொல்லாதே
பிறர் நலன் கருதி பொய் சொல்
அது உண்மைக்கு சமமானது

பெற்றோர், உடன்பிறந்தோர்,நண்பர்கள்
இவர்களிடம் கெளரவம் பார்க்காதே !
உன்னில் சிறியவனிடம்
பணிவாக பேசு(இரு)
பெரியவரிடம் தைரியமாக பேசு
நீ நேர்மையானவனாக இருந்தால்!
அறியாத வயதில் நாம் தெரியாமல்           
செய்யும் காரியமும் பாவமே!

முடிந்த வரை நல்லதை நினை
நல்லதை பேசு
பேசுவதற்கு முன் யோசி
மோசமான குணமுடைய
நண்பர்களிடம் தாமரை இலை
தண்ணீர் போல வாழு
மற்றவர்களுக்கு  நல்லதொரு  முன்
 உதாரணமாக வாழ கற்றுக்கொள்!

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தாய் - தந்தை - கடமை

தாய் ஓர் உன்னதமான அர்த்தங்கள்
எல்லை வரையறுக்கப்படாத உயிர் !
தாய் தந்தையை நினை !
கடவுளை முடிந்தால் நினைத்துப் பார்
இல்லையென்றால் பரவாயில்லை
அந்த கடவுளுக்கே தெரியும்
நீ செய்வது சரியென்று !

கடமையை செய்  
முதலில் கடமை என்றால்
என்ன என்பதை தெரிந்து கொள்.
தாய், தந்தை, உடன் பிறந்தோர்கள்,
உற்றார், உறவினர்கள், உண்மையான
நண்பர்கள் இவர்களுக்கு நாம்
செய்ய வேண்டிய அனைத்தும்
நம் தலையாய கடமையாகும்.

இவற்றை நீ உருப்படியாக
செய்தாலே போதும் வேறு எந்த
தெய்வத்தையும் நினைக்க வேண்டியதில்லை !
இதனால் நான் கடவுளை கும்பிட வேண்டாம்
என்று சொல்லவில்லை .
நம்மில் ஒரு சிலர் மேற்கண்ட
கடமைகள் எதையும் செய்யாமல்
கடவுளை மட்டும் வணங்குபவர்களுக்காக
இதை சொல்கிறேன்.

இதற்கு என்னால் ஏகப்பட்ட
உதாரண புருஷர்களைக்  காட்ட முடியும்
என்பதைவிட இதைப் படிப்பவர்களே
இது போன்ற ஜென்மங்களை
சந்தித்திருப்பார்கள் என்பதே உண்மை.
இதைத்தான் நான் சுருக்கமாக
மனிதனை நினை! கடவுளை மற!
என்று குறிப்பிடுகின்றேன் .
இதை இப்படி எழுதச் சொல்வதே
அந்த கடவுள் தான் என்பதே

அப்பட்டமான  நிகழ்வு
 

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

வேலை காலி இல்லை

என்னென்னவோ தோன்றி மறையும்
இந்த பாரில் ஒன்று மட்டும்
மறையாது இருப்பதை பாரீர் !
அந்த ஒன்று என்னவென்றால்
'வேலை காலி இல்லை' என்ற
மந்திரமே இன்றி வேறேது !

என்று மறையும் இந்த மந்திரம்
என்று எண்ணிப் பார்க்கிறேன்
எனக்குள் இன்று !
ஒருவேளை மறையலாம்
இந்த மந்திரம் அப்போது
இருக்காது இந்த வையகம் !!
------------------------------------------------------------      ----------------------------------------------

மேற்கண்ட  இந்த புலம்பல் நான் வேலை இன்றி 1988 -ல் இருந்த பொழுது எனக்குள்
வெளிவந்தது. அதை தற்போது உங்களுக்கு வெளிப்படுத்துகிறேன் .

புதன், 4 ஆகஸ்ட், 2010

நண்பர்கள்

நண்பர்கள் ஆம் ஓர் உன்னதமான வாக்கியம்.
நண்பர்களில் யார் வென்றார்கள் என்பதைவிட
யாருமே தோற்கவில்லை என்பதே சிறந்ததாகும் .
பொறாமை இல்லாத போட்டி இருக்கவேண்டும்
 ஆம் சேவை எனும் முன்னேறத்தை அடிபடையாக கொண்டு

ஆராய்தல் வேண்டும் நட்புக்குமுன்பு
ஆராய்தல் கூடாது  நட்புக்கு பின்பு
நண்பனின் மக்கள் தம் மக்கள்
தம் மக்கள் நண்பனின் மக்கள்

விட்டுகொடுத்தவர்கள்  தாழ்வதுமில்லை
விட்டுகொடுக்காதவர்கள் தாழ்ந்தவருமில்லை
பாசமது மிகுந்துவிட்டால் எப்போதாவது
கோபமது சற்று பாசத்தினை மறைத்திருக்கும்
எப்படி மரக்கிளைகள் கனியை மறைதிருக்குமோ அதுபோல !!

பாசமெனும் கனியை கோபமெனும் கிளை மறைக்கும் பொழுது
 காற்று எனும் பெருந்தன்மையினால் செய்த
அகிம்சை எனும் ஆயுதத்தை கொண்டு
கோபமெனும் கிளையை விளக்கினால்
கனியும் தெரியும் அதன் சுவையும் புரியும்