வெள்ளி, 23 நவம்பர், 2012

அகிம்சையே வெற்றி...



அகிம்சை என்பதோ அன்பெனும் அறவழியில் நடப்பதே
போராட்டம் என்பதிலும் பங்கு வகிக்குமே அகிம்சை


போராட்டம் என்பதே ஆயுதமில்லா ஒன்றுதானே
உடல்வலிமை வேண்டாமே மனவலிமை போதுமே இதற்கு...

எண்ணில்லா மக்களில் எண்ணிவிடலாம் அகிம்சாவாதிகளை
மனிதனாய் பிறந்தவரை புனிதனாய் மாற்றுமே அகிம்சை...
அப்படி புனிதனாய் மாறியவர்தானே நம்முடைய மகாத்மா
அகிம்சையை பின்பற்றுவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை...

அகிம்சை பற்றி எழுதும்போதே நான் தெரிந்துகொண்டேன்
போராடுவதில் எத்தனையோ வழிகளும் இங்கே உண்டு...
அத்தனையிலும் முடிவில் வென்றது அகிம்சை வழிதானே
இதற்கு சரியான உதாரணமும் நம்நாட்டு சுதந்திரம்தானே...

அகிம்சை எப்போதுமே இம்சைக்கு எதிரான ஒன்றல்ல
இம்சையை தன்னுள் வாங்கிக்கொள்ளும் அதுதான் அகிம்சை...
பொறுமையாய் இருந்தவர்கள் தானே பூமியை ஆண்டதுமுண்டு
ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தால் இங்கு மாண்டதுமுண்டு...

இதுபோன்ற நிகழ்வுகளை பாடப் புத்தகத்தில் படித்ததுமுண்டு
அகிம்சாவாதிகளை சிலர் கேலியும் கிண்டலும் செய்ததுண்டு...
அப்படி செய்தவர்கள் பின் மண்டியிட்டு கிடந்ததுமுண்டு
அகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழ்வோம்...






-------------------------------------------------------------

வியாழன், 22 நவம்பர், 2012

இதுதான் காதல்...



கண்டவுடன் வருவதுமுண்டு காதல்
காணாமலும் வருவதுமுண்டு காதல்
அழகை பார்த்து வருவதில்லை காதல்
நற்குணங்களை பார்த்து வருவதே காதல்...

உடலை விரும்புவது அல்ல காதல்
உள்ளத்தை மட்டுமே நேசிப்பது காதல்
காதலில் இல்லை ஒருபோதும் கள்ளக்காதல்
கள்ளத்தன காரர்களால் களங்கப்பட்டது காதல்...

ஜாதி,மதம் பார்த்து வருவதில்லை காதல்
இன ஒற்றுமையை வளர்க்குமே இந்த காதல்
அன்பினை ஆதாரமாய் கொண்டதே காதல்
உலகத்தை ஓய்வில்லாது வலம்வருவது காதல்...

இருமனங்களை திருமணத்தால் இணைக்கும் காதல்
தம்பதியினர் ஒற்றுமையில் இருக்கும் காதல்
முதியோர்களிடமும் இளமையோடு இருப்பது காதல்
தியாகத்தையும் தன்னகத்தே கொண்டதே காதல்...

ஈருடல் ஓருயிர்
  இப்படி
இருப்பதுதான் காதல்
எப்போது வேண்டுமானாலும் வரும் இந்த காதல்
ஆரோக்கியமான ஒன்றே உண்மையான காதல்
மனிதனை மாமனிதனாக உயர்த்துமே இந்த காதல்...




*************************************************