செவ்வாய், 31 ஜூலை, 2012

தொலைத்துவிட்ட விளையாட்டுக்கள்...

நினைத்து பார்க்கவே முடியவில்லையே...
நமது இளமை கால விளையாட்டுக்களை...
எங்கே போயின அந்த பொன்னான காலம்...
வெய்யில் அனைத்தையும் நாமே குத்தகைக்கு
எடுத்து பூமிக்கு குறைவாக அனுப்பிய காலமது...
விடுமுறை என்றாலே வீதியின் பிள்ளைகளாய்...
வியர்வையில் குளித்து தலைதுவட்டிய நாட்களது...


கோலி விளையாட்டு அதிலும் எத்தனை வகைகள்...
பேந்தா, குழி குண்டு, ஜெயிப்பு குண்டு இன்னும் பல...
கோலி குண்டு, கிலாட்சி, பால்ட்ரஸ் வகை வகையாய்...
பம்பரமெனும் ஒரு குதூகல இனிமையான விளையாட்டு...
ஆக்கர் எனும் பெயரில் குத்தினை வாங்கும் பம்பரங்கள்...
தரையிலே படாமலே நேரடியாகவே கையில் சுழல
வைக்கும் மாயம் கற்றவர்களாக பெருமிதம் உண்டு...

கிட்டிப்புள் என்றே அட்டகாசமான விளையாட்டுமுண்டு...
தாண்டினால் கில்லியை அடித்து ஏகப்பட்டோரின் கண்களை
பதம் பார்த்த வீரர்கள் நம்மில் எத்தனையோ பேருமுண்டு...
அதற்காக அப்பாவிடம் வாங்கிய வீரத்தழும்புகளும் உண்டு...
அத்தனையும் எங்கே போய்விட்டது நம் பிள்ளைகளுக்கு
கிடைக்காமல் தொலைத்து விட்டு தவிக்கின்றோம் நாம்...
மறுபடியும் வருமா நாம் தொலைத்த விளையாட்டுக்கள்...



%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


குறிப்பு:-   இத்தனை விளையாட்டும் நான் சொல்வது 1979 - ல் எங்களால்

விளையாடப்பட்ட ஒன்று... இன்றும் மறக்க முடியாமல் அந்த

ஏக்கத்தின் பிரதிபலிப்பே இந்த ஆக்கம்....  எனது சார்பில்.

சனி, 21 ஜூலை, 2012

எங்(கோ)கே செல்கிறது பள்ளிக்கூடங்கள்..

நான் படிச்ச காலத்துல இருந்தமாரி
இல்லயே இப்போ  இந்த பள்ளிக்கூடம்...
அதிக வருசமொன்னும் ஆகலயே
நெனச்சு பாத்தாலே தலையே சுத்துது...

வாத்தியாருக்கு மருவாதி கொடுத்து
பயந்து போய் படிச்ச காலம் எங்க காலம்...
இப்போ பசங்க எதுவும் சொல்லிருவாங்கன்னு 
பயந்து போயி இருக்கிறாங்க வாத்தியாரும்...

இப்ப எங்க காணோம் அந்த நல்ல காலம்...
அது ஒண்ணும் சங்க காலமும் இல்லயே..
இது நல்லதுக்குன்னு எனக்கு தோனல.
இத பத்தி யாரும் கவலைப்படுவதும் இல்ல..

பசங்க தப்பு செஞ்சா அவங்க அப்பா
கிட்ட வாத்தியார் சொல்லுறது  எங்க காலம்...
வாத்தியார பத்தியே பசங்க அவங்க
அப்பாகிட்ட தப்பா சொல்லுறது இந்தக்காலம்..

எங்கதான் போய் முடியுமுன்னே தெரியலயே...
பெத்தவங்களுக்கும்  தெய்வத்துக்கும் நடுவுல
இருக்கும் இந்த குரு என்கிற வாத்தியார
தலமேல வைத்து கொண்டாடியது எங்க காலம்...

அத்தகைய மதிப்பான வாத்தியார  மதிக்காம
நேருக்கு நேர் எதுக்கிறது  இந்தக்காலம்.
யாரச்சொல்லியும் எந்த பிரயோஜனமும்  இல்லே...
யாரிதை கேக்கணுமோ அவங்களும் கேக்கலயே..

இப்படியே போனா என்ன ஆவாங்களோன்னு
பசங்கள நெனச்சா கவலையா இருக்கெனக்கு
பெத்தவங்கத்தான் தன்னோட பசங்கள கவனிச்சு 
படிக்க சொல்லி அக்கற எடுத்து பாத்துக்கணும்...



வெள்ளி, 13 ஜூலை, 2012

இப்படி நீ இருப்பதும் நியாயமா...

வளமான வயலும் நீரின்றி பயனற்று கிடப்பது போல...

அழகான சிறகிருந்தும் பறக்க வாய்ப்பு மறுப்பது போல...

அழகான பூவிருந்தும் அதை சூட மறுப்பது போல...

கைகள் இருந்தும் கொடை செய்ய மறுப்பது போல...

இறக்கமிருந்தும் கொடுக்க வசதி இல்லாத ஆள் போல...

உணவிருந்தும் அதை புசிக்க பசி இல்லா வயிறு போல...

கண்கள் இருந்தும் அழகை ரசிக்க மனமில்லாதது போல....

பேசும் திறன் இருந்தும் பேசா மடந்தையை போல...

அன்பை தாராளமாக அள்ளித்தரும் எனக்கோ - உன்

அன்பை துளியும் தர மறுப்பதும் ஏனோ என் கண்ணே...

அன்பிற்கு ஏங்கும் என் மீது இரக்கமே இல்லையா என்னவளே...

என்னுடன் வாழ அனைவரின் ஆசியோடு என்வீடு வந்தவளே....

ஞாயிறு, 3 ஜூன், 2012

தெ((பு)ரிந்து வாழுங்கள் மக்களே...



கண்ணிருந்தும் நற்காட்சியை காணாமல்

வாயிருந்தும் நல்வார்த்தை வராமல்

காதிருந்தும் நல்லதை கேட்கும் திறனில்லாமல்

கையிருந்தும் கொடை எண்ணமில்லாமல்

இரண்டு காலிருந்தும் நற்பாதை செல்லாமல்

நெஞ்சமிருந்தும் துளியும் ஈரமில்லாமல்

மனதிருந்தும் அதில் மனசாட்சியில்லாமல்

இத்தனையும் இருக்கும் இருந்தும் இல்லாமல்

இ(எ)ப்படி மனிதனாய் இருந்தும் இல்லாமல்

இருக்கும் இவர்களை என்னவென்று சொல்லாமல்

எனக்கென்னவென்று எல்லோரும் போவதால்

இந்த ஜென்மங்கள் நம்மோடு இருப்பது மட்டுமல்லாமல்

கூனிக்குறுகி இருந்து ஒருசேர கூடி வாழாமல்

தலைக்கணம் கொண்டு வாழத்தான் செய்கிறார்கள்....

என்னவென்று சொல்வது இந்த அநியாய நிலைமையை...

என்று மாறுமோ இந்த அவல நிலை இந்த அவணியில்....

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வியாழன், 10 மே, 2012

நேர்மையை சுவாசியுங்கள்


வேண்டாமே நேர்மையற்ற வழியில்
சம்பாரிக்கும் அந்த அச்சடித்த காகிதம்...

அடிப்படை வசதிகள் எல்லாமிருந்தும்
செய்ய வேண்டாமே இந்த பாவச்செயலை...

அளவுக்கு மீறி அநியாயமாய் சம்பாரித்து
அப்படி என்ன தான் செய்ய போகிறீர்கள்...

எதுவுமே இல்லாமல் இருப்பவர்களை கண்கூடாக
பாருங்கள்ஒரு நிமிடம் யோசித்தும் பாருங்கள்...

மனசாட்சி இருந்தால் இதுவரை எப்படியோ
இனியாவது நீங்கள் திருந்தி வாழுங்கள்...

சாவதற்குள் ஒரு நாளாவது நேர்மையானவனாக
இருந்து விட்டுத்தான் போய் சேருங்களேன்.....


***********************************************************************************

வியாழன், 7 ஏப்ரல், 2011

மயிலாகுமா எந்நிலையிலும் வான்கோழி !
















ஒவ்வொருத்தருக்கும் என்று ஒரு
தனித்துவம் என்ற ஒன்று உண்டு !
அந்த தனித்துவத்தின் திறனான்மையை
முழுவதுமாக பயன்படுத்தி அதன் பொருட்டு
நம்மை சார்ந்த, சாராத யாவரும் பயனிக்க
வேண்டுமளவிற்கு அமைந்(த்)திட வேண்டுமே !
                     -  அல்லாது  -
யாரோ ஒருவர் அவர் தன் தனித்துவத்தால்
புகழின் உச்சிக்கு சென்ற நிலை அறிந்து                  
தானும் அதுபோல ஆக எண்ணி
நம்மையும் எல்லோரும் ஆஹா என்னே இவன் என 
என்ன வேண்டும் என்ற எண்ணத்தினால் எண்ணிலடங்கா
புகழ்ச்சி என்னும் மதம் தலைக்கேறி
அதனால் சேதம் யாருக்குமில்லாது தான்
மட்டுமே தன்னால் அழியும் நிலையை
உண்டாக்கி விடும் என்பதே இதன் சாராம்சம் !

எந்த ஒரு நம்முடைய செயல்பாட்டின்
நிலைமை நம் சிந்தையை வருடுவதாக
இருக்கவேண்டும் மாறாக சீ(தூ)ண்டுவதாக
அமைந்து சீரான நம் வாழ்க்கை தடம்
பிறழாமல் பார்த்துக்கொள்வதுவும் நம்
நெஞ்சத்தில் தினம் எழுகின்ற லட்சியமாக
இருக்கவேண்டுமே தவிர அதை அலட்சியம்
செய்பவர்களாக இருக்க கூடாது !

மூன்றாவது பத்தியில் வருவதைத்தான்
நான் மேற்கூறியஅந்த அழகுமிகு
நயமான உள்ளத்தை மயிலறகால் மட்டுமே
வருடும் வண்ணமிகு சொற்றொடர் !
எந்நிலையிலும் தன்னிலை மறவாது
பிறரை போல் ஆவதற்கு முயற்சி செய்யலாம்
தவறில்லை அதற்கும் ஒரு எல்லையை
தமக்கு தானே வளர்த்துக்கொண்டு
அதிலிருந்து மா(மீ)றாது  இருந்தால்
மனிதர்களிடயே நாம் வீழாது இருக்கலாம் ! !