செவ்வாய், 31 ஜூலை, 2012

தொலைத்துவிட்ட விளையாட்டுக்கள்...

நினைத்து பார்க்கவே முடியவில்லையே...
நமது இளமை கால விளையாட்டுக்களை...
எங்கே போயின அந்த பொன்னான காலம்...
வெய்யில் அனைத்தையும் நாமே குத்தகைக்கு
எடுத்து பூமிக்கு குறைவாக அனுப்பிய காலமது...
விடுமுறை என்றாலே வீதியின் பிள்ளைகளாய்...
வியர்வையில் குளித்து தலைதுவட்டிய நாட்களது...


கோலி விளையாட்டு அதிலும் எத்தனை வகைகள்...
பேந்தா, குழி குண்டு, ஜெயிப்பு குண்டு இன்னும் பல...
கோலி குண்டு, கிலாட்சி, பால்ட்ரஸ் வகை வகையாய்...
பம்பரமெனும் ஒரு குதூகல இனிமையான விளையாட்டு...
ஆக்கர் எனும் பெயரில் குத்தினை வாங்கும் பம்பரங்கள்...
தரையிலே படாமலே நேரடியாகவே கையில் சுழல
வைக்கும் மாயம் கற்றவர்களாக பெருமிதம் உண்டு...

கிட்டிப்புள் என்றே அட்டகாசமான விளையாட்டுமுண்டு...
தாண்டினால் கில்லியை அடித்து ஏகப்பட்டோரின் கண்களை
பதம் பார்த்த வீரர்கள் நம்மில் எத்தனையோ பேருமுண்டு...
அதற்காக அப்பாவிடம் வாங்கிய வீரத்தழும்புகளும் உண்டு...
அத்தனையும் எங்கே போய்விட்டது நம் பிள்ளைகளுக்கு
கிடைக்காமல் தொலைத்து விட்டு தவிக்கின்றோம் நாம்...
மறுபடியும் வருமா நாம் தொலைத்த விளையாட்டுக்கள்...



%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


குறிப்பு:-   இத்தனை விளையாட்டும் நான் சொல்வது 1979 - ல் எங்களால்

விளையாடப்பட்ட ஒன்று... இன்றும் மறக்க முடியாமல் அந்த

ஏக்கத்தின் பிரதிபலிப்பே இந்த ஆக்கம்....  எனது சார்பில்.

சனி, 21 ஜூலை, 2012

எங்(கோ)கே செல்கிறது பள்ளிக்கூடங்கள்..

நான் படிச்ச காலத்துல இருந்தமாரி
இல்லயே இப்போ  இந்த பள்ளிக்கூடம்...
அதிக வருசமொன்னும் ஆகலயே
நெனச்சு பாத்தாலே தலையே சுத்துது...

வாத்தியாருக்கு மருவாதி கொடுத்து
பயந்து போய் படிச்ச காலம் எங்க காலம்...
இப்போ பசங்க எதுவும் சொல்லிருவாங்கன்னு 
பயந்து போயி இருக்கிறாங்க வாத்தியாரும்...

இப்ப எங்க காணோம் அந்த நல்ல காலம்...
அது ஒண்ணும் சங்க காலமும் இல்லயே..
இது நல்லதுக்குன்னு எனக்கு தோனல.
இத பத்தி யாரும் கவலைப்படுவதும் இல்ல..

பசங்க தப்பு செஞ்சா அவங்க அப்பா
கிட்ட வாத்தியார் சொல்லுறது  எங்க காலம்...
வாத்தியார பத்தியே பசங்க அவங்க
அப்பாகிட்ட தப்பா சொல்லுறது இந்தக்காலம்..

எங்கதான் போய் முடியுமுன்னே தெரியலயே...
பெத்தவங்களுக்கும்  தெய்வத்துக்கும் நடுவுல
இருக்கும் இந்த குரு என்கிற வாத்தியார
தலமேல வைத்து கொண்டாடியது எங்க காலம்...

அத்தகைய மதிப்பான வாத்தியார  மதிக்காம
நேருக்கு நேர் எதுக்கிறது  இந்தக்காலம்.
யாரச்சொல்லியும் எந்த பிரயோஜனமும்  இல்லே...
யாரிதை கேக்கணுமோ அவங்களும் கேக்கலயே..

இப்படியே போனா என்ன ஆவாங்களோன்னு
பசங்கள நெனச்சா கவலையா இருக்கெனக்கு
பெத்தவங்கத்தான் தன்னோட பசங்கள கவனிச்சு 
படிக்க சொல்லி அக்கற எடுத்து பாத்துக்கணும்...



வெள்ளி, 13 ஜூலை, 2012

இப்படி நீ இருப்பதும் நியாயமா...

வளமான வயலும் நீரின்றி பயனற்று கிடப்பது போல...

அழகான சிறகிருந்தும் பறக்க வாய்ப்பு மறுப்பது போல...

அழகான பூவிருந்தும் அதை சூட மறுப்பது போல...

கைகள் இருந்தும் கொடை செய்ய மறுப்பது போல...

இறக்கமிருந்தும் கொடுக்க வசதி இல்லாத ஆள் போல...

உணவிருந்தும் அதை புசிக்க பசி இல்லா வயிறு போல...

கண்கள் இருந்தும் அழகை ரசிக்க மனமில்லாதது போல....

பேசும் திறன் இருந்தும் பேசா மடந்தையை போல...

அன்பை தாராளமாக அள்ளித்தரும் எனக்கோ - உன்

அன்பை துளியும் தர மறுப்பதும் ஏனோ என் கண்ணே...

அன்பிற்கு ஏங்கும் என் மீது இரக்கமே இல்லையா என்னவளே...

என்னுடன் வாழ அனைவரின் ஆசியோடு என்வீடு வந்தவளே....