வெள்ளி, 13 ஜூலை, 2012

இப்படி நீ இருப்பதும் நியாயமா...

வளமான வயலும் நீரின்றி பயனற்று கிடப்பது போல...

அழகான சிறகிருந்தும் பறக்க வாய்ப்பு மறுப்பது போல...

அழகான பூவிருந்தும் அதை சூட மறுப்பது போல...

கைகள் இருந்தும் கொடை செய்ய மறுப்பது போல...

இறக்கமிருந்தும் கொடுக்க வசதி இல்லாத ஆள் போல...

உணவிருந்தும் அதை புசிக்க பசி இல்லா வயிறு போல...

கண்கள் இருந்தும் அழகை ரசிக்க மனமில்லாதது போல....

பேசும் திறன் இருந்தும் பேசா மடந்தையை போல...

அன்பை தாராளமாக அள்ளித்தரும் எனக்கோ - உன்

அன்பை துளியும் தர மறுப்பதும் ஏனோ என் கண்ணே...

அன்பிற்கு ஏங்கும் என் மீது இரக்கமே இல்லையா என்னவளே...

என்னுடன் வாழ அனைவரின் ஆசியோடு என்வீடு வந்தவளே....

4 கருத்துகள்:

 1. அன்பை விதையுங்கள் கண்டிப்பாக முளைத்தே தீரும்.

  பதிலளிநீக்கு
 2. அருமையாக சொன்னீர்கள் சசிகலா...முயன்றால் முடியாதது ஏதுமில்லை என்கிறீர்கள்..நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மிக அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு..விதைக்க வேண்டிய நல்ல இடத்தை தேர்ந்தெடுத்து விதைத்தால் மட்டும் நன்றாக விளையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் தாங்கள் சொல்வது..நன்றி தங்களின் மேலான கருத்திற்கு.

   நீக்கு

b:if cond='data:post.embedCommentForm'