சனி, 21 ஜூலை, 2012

எங்(கோ)கே செல்கிறது பள்ளிக்கூடங்கள்..

நான் படிச்ச காலத்துல இருந்தமாரி
இல்லயே இப்போ  இந்த பள்ளிக்கூடம்...
அதிக வருசமொன்னும் ஆகலயே
நெனச்சு பாத்தாலே தலையே சுத்துது...

வாத்தியாருக்கு மருவாதி கொடுத்து
பயந்து போய் படிச்ச காலம் எங்க காலம்...
இப்போ பசங்க எதுவும் சொல்லிருவாங்கன்னு 
பயந்து போயி இருக்கிறாங்க வாத்தியாரும்...

இப்ப எங்க காணோம் அந்த நல்ல காலம்...
அது ஒண்ணும் சங்க காலமும் இல்லயே..
இது நல்லதுக்குன்னு எனக்கு தோனல.
இத பத்தி யாரும் கவலைப்படுவதும் இல்ல..

பசங்க தப்பு செஞ்சா அவங்க அப்பா
கிட்ட வாத்தியார் சொல்லுறது  எங்க காலம்...
வாத்தியார பத்தியே பசங்க அவங்க
அப்பாகிட்ட தப்பா சொல்லுறது இந்தக்காலம்..

எங்கதான் போய் முடியுமுன்னே தெரியலயே...
பெத்தவங்களுக்கும்  தெய்வத்துக்கும் நடுவுல
இருக்கும் இந்த குரு என்கிற வாத்தியார
தலமேல வைத்து கொண்டாடியது எங்க காலம்...

அத்தகைய மதிப்பான வாத்தியார  மதிக்காம
நேருக்கு நேர் எதுக்கிறது  இந்தக்காலம்.
யாரச்சொல்லியும் எந்த பிரயோஜனமும்  இல்லே...
யாரிதை கேக்கணுமோ அவங்களும் கேக்கலயே..

இப்படியே போனா என்ன ஆவாங்களோன்னு
பசங்கள நெனச்சா கவலையா இருக்கெனக்கு
பெத்தவங்கத்தான் தன்னோட பசங்கள கவனிச்சு 
படிக்க சொல்லி அக்கற எடுத்து பாத்துக்கணும்...8 கருத்துகள்:

 1. உண்மைதான்! இப்போது வாத்தியார்கள் மாணவர்களுக்கு பயப்படும் நிலை வந்துவிட்டது! கலிமுத்திவிட்டது என்று சொல்லலாமா?

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வலைத்தளத்தை சசியின் வலைதளத்தில் நீங்கள் இட்ட தரமான கருத்துமூலம் வந்தடைந்தேன். இந்த பதிவு படிக்க நன்றாக இருக்கிறது. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம் & குறை சொல்வார்கள் என்று பயப்பட வேண்டாம் அவரவர்கள் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தால்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வதும் உண்மைதான். உண்மையை சொல்வதற்கு தயக்கமோ, கலக்கமோ தேவையில்லை... சரி என்று பட்டதை தெளிவாக சொல்ல முற்படுவோம்...

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆம்.. இப்படியே போனால் மாணவர்களின் நிலை தான் மிகவும் மோசமாக போய்விடும்... அந்த கவலை தான் நம்மை அனுதினமும் அரித்தெடுக்கிறது...

   நீக்கு
 4. நன்றி நண்பரே மதுமதி...ஒரு சில பள்ளியில் நடக்கும் விஷயத்தை கேட்கும்போது எங்கு தான் போய் முடியுமோ என்றே தெரியவில்லை..அதுபற்றி புரியவுமில்லை.

  பதிலளிநீக்கு

b:if cond='data:post.embedCommentForm'