எப்படி கவிஞரே எங்களை
விட்டுச் செல்ல துணிந்தாய் !
கோடிக்கணக்கில் உனக்காக
உன்னின் எழுத்துக்காக நாளும்
எதிர்பார்த்தே வாழும் தமிழ்
நெஞ்சங்களை தவிக்க விட்டே...
மண்ணுலகில் நட்சத்திரமாய்
இருந்த நீயோ இப்போது விண்ணில்
தேவர்களின் வேண்டுகோளுக்கு
செவி சாய்த்தா விண்ணுலகம் சென்றாய்
இன்னும் சிறிது நாட்கள் வாய்தா
கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்களே...
ஏன் அதை செய்ய மறந்தே எங்களை
மீள முடியா அக்கினியில் தள்ளிவிட்டாய்
யார் கேட்டாலும் கொடுத்தே
பழகியதால் நேர்ந்ததோ இந்த மரணம்
உன்னை காலமானதாக சொல்கிறார்கள்
ஆம் உண்மைதான் நீ முக்காலமுமானாய்...
கடந்தகாலம் நிகழ்காலம் வருங்காலம்
அத்தனை மக்களின் எண்ணங்களில் நீ
வெளிநாட்டுக்கு கூட செல்லாத நீ
இப்போது எப்படி விண்ணுலகம் சென்றாய்
ஓ... அதற்கு பாஸ்போர்ட் வேண்டாம்
என்பதாலா சட்டென்றே சென்றுவிட்டாய்...
இருக்கையிலே உயிரோடு இருக்கையிலே
திருநீரு குங்குமத்தோடு காட்சி தந்தாய்
வான் நோக்கி சென்றதனாலா
வான் நோக்கிய திருநாமத்தை சுமந்தாய்
எல்லாமும் எனக்கு ஒன்றே என்பதை
இருந்தும் இறந்தும் நிரூபித்தாய்....
மக்களால் மறந்த ஒருவன் தான்
இருந்தும் இறந்தவனாவன்
அப்படி பார்த்தால் என்றுமே உனக்கு
இறந்தும் இறவாத பெருமை உண்டு
வாலியே எங்களது கவிஞர் வாலியே
என்றுமே நீ வாழிய வாழியவே....
விட்டுச் செல்ல துணிந்தாய் !
கோடிக்கணக்கில் உனக்காக
உன்னின் எழுத்துக்காக நாளும்
எதிர்பார்த்தே வாழும் தமிழ்
நெஞ்சங்களை தவிக்க விட்டே...
மண்ணுலகில் நட்சத்திரமாய்
இருந்த நீயோ இப்போது விண்ணில்
தேவர்களின் வேண்டுகோளுக்கு
செவி சாய்த்தா விண்ணுலகம் சென்றாய்
இன்னும் சிறிது நாட்கள் வாய்தா
கேட்டிருந்தால் கொடுத்திருப்பார்களே...
ஏன் அதை செய்ய மறந்தே எங்களை
மீள முடியா அக்கினியில் தள்ளிவிட்டாய்
யார் கேட்டாலும் கொடுத்தே
பழகியதால் நேர்ந்ததோ இந்த மரணம்
உன்னை காலமானதாக சொல்கிறார்கள்
ஆம் உண்மைதான் நீ முக்காலமுமானாய்...
கடந்தகாலம் நிகழ்காலம் வருங்காலம்
அத்தனை மக்களின் எண்ணங்களில் நீ
வெளிநாட்டுக்கு கூட செல்லாத நீ
இப்போது எப்படி விண்ணுலகம் சென்றாய்
ஓ... அதற்கு பாஸ்போர்ட் வேண்டாம்
என்பதாலா சட்டென்றே சென்றுவிட்டாய்...
இருக்கையிலே உயிரோடு இருக்கையிலே
திருநீரு குங்குமத்தோடு காட்சி தந்தாய்
வான் நோக்கி சென்றதனாலா
வான் நோக்கிய திருநாமத்தை சுமந்தாய்
எல்லாமும் எனக்கு ஒன்றே என்பதை
இருந்தும் இறந்தும் நிரூபித்தாய்....
மக்களால் மறந்த ஒருவன் தான்
இருந்தும் இறந்தவனாவன்
அப்படி பார்த்தால் என்றுமே உனக்கு
இறந்தும் இறவாத பெருமை உண்டு
வாலியே எங்களது கவிஞர் வாலியே
என்றுமே நீ வாழிய வாழியவே....
வணக்கம்...
பதிலளிநீக்குவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/7.html) சென்று பார்க்கவும்... நன்றி...
மகிழ்ச்சி. அன்பு நண்பரே பார்த்தேன்.
பதிலளிநீக்குதங்களின் மேலான தகவலுக்கு என் நன்றி.