வெள்ளி, 23 நவம்பர், 2012

அகிம்சையே வெற்றி...அகிம்சை என்பதோ அன்பெனும் அறவழியில் நடப்பதே
போராட்டம் என்பதிலும் பங்கு வகிக்குமே அகிம்சை


போராட்டம் என்பதே ஆயுதமில்லா ஒன்றுதானே
உடல்வலிமை வேண்டாமே மனவலிமை போதுமே இதற்கு...

எண்ணில்லா மக்களில் எண்ணிவிடலாம் அகிம்சாவாதிகளை
மனிதனாய் பிறந்தவரை புனிதனாய் மாற்றுமே அகிம்சை...
அப்படி புனிதனாய் மாறியவர்தானே நம்முடைய மகாத்மா
அகிம்சையை பின்பற்றுவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை...

அகிம்சை பற்றி எழுதும்போதே நான் தெரிந்துகொண்டேன்
போராடுவதில் எத்தனையோ வழிகளும் இங்கே உண்டு...
அத்தனையிலும் முடிவில் வென்றது அகிம்சை வழிதானே
இதற்கு சரியான உதாரணமும் நம்நாட்டு சுதந்திரம்தானே...

அகிம்சை எப்போதுமே இம்சைக்கு எதிரான ஒன்றல்ல
இம்சையை தன்னுள் வாங்கிக்கொள்ளும் அதுதான் அகிம்சை...
பொறுமையாய் இருந்தவர்கள் தானே பூமியை ஆண்டதுமுண்டு
ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தால் இங்கு மாண்டதுமுண்டு...

இதுபோன்ற நிகழ்வுகளை பாடப் புத்தகத்தில் படித்ததுமுண்டு
அகிம்சாவாதிகளை சிலர் கேலியும் கிண்டலும் செய்ததுண்டு...
அப்படி செய்தவர்கள் பின் மண்டியிட்டு கிடந்ததுமுண்டு
அகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழ்வோம்...


-------------------------------------------------------------

4 கருத்துகள்:

 1. அகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழ்வோம்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ... தங்களின் அன்பான வாழ்த்துக்கு...
   தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்திற்கும் என்னுடைய ஆங்கில இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

   நீக்கு
 2. அகிம்சையை பின்பற்றி வாழும்போதே மனிதனாக வாழலாம். இனிய வாழ்த்து.

  என் வலைக்கு வாங்கோ! நல்வரவு!
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக வருகிறேன்... நன்றி.. தங்களின் இனிய வருகைக்கும்.. எனை அன்பாக அழைத்தமைக்கும்.

   நீக்கு

b:if cond='data:post.embedCommentForm'