வியாழன், 22 நவம்பர், 2012

இதுதான் காதல்...கண்டவுடன் வருவதுமுண்டு காதல்
காணாமலும் வருவதுமுண்டு காதல்
அழகை பார்த்து வருவதில்லை காதல்
நற்குணங்களை பார்த்து வருவதே காதல்...

உடலை விரும்புவது அல்ல காதல்
உள்ளத்தை மட்டுமே நேசிப்பது காதல்
காதலில் இல்லை ஒருபோதும் கள்ளக்காதல்
கள்ளத்தன காரர்களால் களங்கப்பட்டது காதல்...

ஜாதி,மதம் பார்த்து வருவதில்லை காதல்
இன ஒற்றுமையை வளர்க்குமே இந்த காதல்
அன்பினை ஆதாரமாய் கொண்டதே காதல்
உலகத்தை ஓய்வில்லாது வலம்வருவது காதல்...

இருமனங்களை திருமணத்தால் இணைக்கும் காதல்
தம்பதியினர் ஒற்றுமையில் இருக்கும் காதல்
முதியோர்களிடமும் இளமையோடு இருப்பது காதல்
தியாகத்தையும் தன்னகத்தே கொண்டதே காதல்...

ஈருடல் ஓருயிர்
  இப்படி
இருப்பதுதான் காதல்
எப்போது வேண்டுமானாலும் வரும் இந்த காதல்
ஆரோக்கியமான ஒன்றே உண்மையான காதல்
மனிதனை மாமனிதனாக உயர்த்துமே இந்த காதல்...
*************************************************

2 கருத்துகள்:

 1. ''..ஈருடல் ஓருயிர் இப்படி இருப்பதுதான் காதல்
  எப்போது வேண்டுமானாலும் வரும் இந்த காதல்
  ஆரோக்கியமான ஒன்றே உண்மையான காதல்
  மனிதனை மாமனிதனாக உயர்த்துமே இந்த காதல்... ''
  Mikka nanru. Eniya vaalyhu.....
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் அழகிய வாழ்த்துக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு

b:if cond='data:post.embedCommentForm'