ஞாயிறு, 12 டிசம்பர், 2010

(அரிமா) நட்பின் மாண்பு

அரிமா என்றாலே சேவை எனும் 
நீரை எல்லோருக்கும் வாரிவழங்குவதில்
எப்படி  எல்லோருக்கும் கொடுப்பதனால்
குறையாத அந்த கடலை போன்றவர்கள் !
நாம் இங்கு காணவிருப்பதோ
அந்த பெருமைக்குறிய நம் அரிமா
நண்பர்களின் நட்பின் மாண்பு
பற்றிய ஒரு சிறிய விழிப்புணர்வையே !நண்பர்களில் எல்லோரும் சந்தோசமாக 
இருக்கிறார்கள் என்பதை விட 
எவர் ஒருவருமே வருத்தப்படவில்லை 
என்பதே மிகச் சிறந்த ஒன்றாகும் 
போட்டி இருக்க வேண்டும் 
அது பொறாமை இல்லாத 
சேவை ஒன்றையே  அடிப்படையாக 
கொண்டு அமைய வேண்டும் 


ஆராய்தல் வேண்டும் நட்புக்கு  முன்பு  
ஆராய்ச்சி கூடாது நட்புக்கு  பின்பு 
இது சாதாரணமாக   நட்புக்குரியது 
இந்த வசதி கூட நம்
அரிமா நண்பர்களுக்கு கிடையாது !
விட்டுக்கொடுத்தவர்கள் தாழ்வதுமில்லை
விட்டுக்கொடுக்காதவர்கள் தாழ்ந்த்தவருமில்லை 


பாசமது மிகுந்து விட்டால் 
கோபமது சற்று பாசத்தினை       
எப்போதாவது மறைத்திருக்கும்
எப்படி மரக்கிளை கனியை 
மறைத்திருக்குமோ அது போல 
பாசமெனும் கனியை கோபமெனும் 
கிளைகள் மறைக்கும் பொழுது 
காற்று எனும் பெருந்தன்மையினால் 
கோபமெனும் கிளையை விலக்கினாள்
பாசமெனும் கனியும் தெரியும் 
அதன் தன்மையும் புரியும்! 


பெண் பெற்றதனால் தாயாகிறாள் 
நாம் பிறந்ததனால் சேயாகிறோம்
அரிமாவில் நாம் இடம்
பெற்றதனால் தாயானோம் 
மற்ற நண்பர்களை பெற்றதனால் 
அனைவரும் நமக்கு சேயானார்கள்
ஒவ்வொருவரின் மனநிலையும் 
இப்படித்தான்  இருக்கவேண்டும் !


எப்படி தாய்க்கும் சேய்க்கும் 
இடையே எந்தவித எதிர்பார்ப்பும் 
இல்லாத அன்பும், பாசமும், 
அரவணைப்பும,பரிவும் ஏற்படுகிறதோ
இவற்றைப்போல நம் அரிமா 
நண்பர்களின் நட்பும் இருக்கவேண்டும் 
இவ்வாறு இருந்துவிட்டால் ஒருபோதும் 
இருக்காது கருத்து வேற்றுமை 
எனும் வேறுபாடு !


அரிமா நண்பர்களிடையே
பார்க்கக் கூடாதது கெளரவம்
நம்மில் சற்று குணம் குறைந்தவர்கள் 
இருக்கும் பட்சத்தில் 
அவர்களை ஒதுக்காமல்(தள்ளி வைக்காமல்)  
 உதாரணத்திற்கு எப்படி நாம் வாழ்க்கையில் 
வாசனைபூக்களிடையே வாசனை அற்ற
பூக்களையும் பயன்படுத்துகிறோமோ அது போல  மேலும் 
தாமரை இலை  தண்ணீரிலேயே இருந்தாலும் 
எப்படி ஒட்டியும் ஒட்டாமலும் 
இருக்கின்றதோ அதுபோல 
பகைமை பாராட்டாமல் 
வாழக்கற்றுக்கொண்டால் எப்போதும் 
நண்பர்களிடையே மிஞ்சுவது சந்தோசம் 
மட்டுமே என்பதில் துளியும் ஐயமில்லை!
----------------------------------------------------------------------0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'