செவ்வாய், 14 டிசம்பர், 2010

இப்படியும் வாழலாமே !

முட்களாய் தான் இருக்கின்றன நா(ம்)ன்
செல்கின்ற எல்லா சாலைகளும் அதற்காக
வருத்தப்படவில்லை ......... மாறாக
என் கால்களை நானே இரும்பாக
பக்குவப்படுத்(தி)த பழகிக்கொண்டேன் ! .                                                                                                                                                                                             
உனக்கென்று  ஒரு சரியான 
பாதையை வகுத்துக்கொள்
உயிரே போவதாக இருந்தாலும்
சற்றும் அதிலிருந்து விலகாமல்
இருந்து விடு  இல்லையேல்   இறந்து விடு!

நேர்மை தவறி தவறான வழியில்
பணம் சம்பாதிக்க எண்ணுபவர்களே
ஒரு நிமிடம் கர்மவீரர் காமராஜரை
நினைத்து பாருங்கள் உண்மையிலேயே
மனசாட்சி இருந்தால்  திருந்திவிடுவீர்கள்.

அமில மழை போன்ற நயவஞ்சகர்களின்                 
அசுத்தமான வார்த்தைகள்  என் வாழ்வெனும்
குடைதனை பொசுக்கின ..... இருந்தும்
ஒவ்வொரு துளியின் இடைவெளியிலும்
நுழைந்து  நல்லவனாகவே  வெளியில் வந்தேன் !

                                                                  
நல்லவனாக வாழ்வது கடினம் போல
தோன்றும் ஆனால் இரவில் நீ
தூங்குவதற்கு முன் நினைத்து பார்!
அதனுடைய  மகத்துவம்  புரியும்,
உன்மேல் உனக்கே மரியாதை வரும் .

அப்படி ஒன்றும் மிகவும்
எளிதானதல்ல ... வாழ்க்கை வாழ்வதற்கு 
அப்படி ஒன்றும் மிக மிக
கடினமுமல்ல... வாழ்க்கையை வாழ்வதற்கு 
உன்னுடைய நன்னடத்தை தான் வாழ்க்கை!.....

மனிதா!  நீ  சாவதற்குள்
ஒரு நாளேனும் நல்லவனாக
இருந்து பார்!  அதுவும் நீ உன் சுய நினைவில்
இருக்கும்போது... அப்போது தான்
 நீ இந்த பூமியில் வந்து பிறந்ததற்கான
அர்த்தத்தை உணர்ந்து கொள்வாய் ! !....

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'