வெள்ளி, 31 டிசம்பர், 2010

கடவுளே உன்னிடம் ஒரு நிமிடம்!

கடவுளே ஒவ்வொரு மனிதனின்
செயலுக்கும் காரணம் நீ தான் !
அவன்  இந்த ஜென்மத்தில்
என்ன நல்ல காரியம் செய்கின்றான்
என்னென்ன பாவங்கள் புரிகின்றான்
என்பதை வைத்தே அவனுடைய
விதி என்று சொல்லப்படுகிற உன்னுடைய
லீலைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் .

உன்னுடைய  கணிப்பு அனைத்தும்
மனிதன் அவனுடைய முன் ஜென்மத்தில்
அவனவன் செய்த பாவ புண்ணியத்தை
வைத்தே நீ கணக்கிடுவதாக
எல்லோரும் சொல்ல கேள்வி!
உண்மையிலேயே  இந்த அடிப்படையை
கொண்டு தான் நீ உன் செயல்களை
நடத்துகிறாய் என்றால் கடவுளே
உன்னிடம் ஒரு நிமிடம்!

உன்னுடைய அனுமதியோடு
உனக்கு ஒரு யோசனை
மனிதனின் முன் ஜென்மம்
என்ற ஒன்றை யாரும்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை !
அதை யாரும் நான் போன
ஜென்மத்தில் இப்படி இருந்தேன்
அப்படி இருந்தேன் என்று
உணர்ந்து சொன்னவர்கள் இல்லை
அப்படி இருக்கும் பொழுது
அவனின் முன் ஜென்மத்தை
வைத்து இந்த ஜென்மத்தில்
அவனுடைய வாழ்க்கை அமையக்கூடாது !

இந்த ஜென்மத்தில் அவன்
செய்கின்ற பாவ புண்ணியத்தை
வைத்து அவனுக்கு வாழ்க்கையை
நீ அமைத்தால் தான்
மனிதனுக்கு உன்னிடத்தில் மரியாதையுடன்
கூடிய பய பக்தி  இருக்கும்.
அப்பொழுது தான் மனிதனுக்கு
வாழ்க்கையில் தவறு ஏதும்
செய்யாமல் தான் இருக்கும்
வரை நல்லதை செய்வார்கள்.

பணத்துக்காக மானத்தை விட்டு
இழி செயலில் ஈடுபட்டு
சம்பாரிக்கும் ஆண்களுக்கும் உன்
மேல் பயம் வரும் .
மனிதனுக்கு மனிதன் பே(வே)தம்
பார்க்காமல் மனிதனை மனிதனாக
நடத்துவதற்கு முயல்வார்கள்.
மனமறிந்து பிறர்க்கு கெடுதல்
செய்பவர்களை கடவுளே அவர்களை
நீ இந்த பூமியில் விட்டு வைக்காதே !
உடனே அவர்களுக்கு உயர்
பதவி கொடுத்து வானுலகத்திற்கு
அனுப்பி வைத்து விடு !
அப்பொழுது தான் உன்மேல்
மக்களாக பிறந்தவர்களுக்கு நம்பிக்கை
ஏற்பட்டு உன்னை நம்புவார்கள் .
நீ(கடவுள்) மக்களுக்கு மட்டும் தான்
உரியவனாக இருக்கவேண்டுமே தவிர
மாக்களாக வாழ்பவர்களுக்கு  அல்ல!

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'