திங்கள், 3 ஜனவரி, 2011

இப்படி(யும்) இருப்பது தவ(று)றா?

உயரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் 
எல்லோராலும் மதிக்கத்தக்க வகையில் 
பணத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள்  
அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் 
நேர்மையானவனாக இருக்கும் பட்சத்தில்
அவனை துச்சமாக நினைத்து பார்ப்பது,
நேர்மைக்கு முற்றிலும் மாறாக 
நடப்பவனை கண்டு பயந்து 
நடுங்குவது, தனக்கே அநியாயம் 
இழைக்கும் போதும் சரி அல்லது 
பிறர்க்கு அநியாயம் செய்கின்றபோதும் 
சரி அதையும் கண்டும் காணாமல்
இருப்பது, உண்மையிலேயே கஷ்டப்படுபவனுக்கு 
உதவி செய்ய யோசித்து அதற்கு 
சம்பந்தமில்லா காரணங்களை கூறி 
கொடுக்க மறுப்பது , 


உண்மை  வழி நடப்பவனை 
பற்றி துளியும் நினைத்து பார்க்காதது,
தனக்கு துரோகம் செய்பவனுக்கு 
அடங்கிப்போவதும் அதற்கு ஒரு 
காரணத்தை தானே கூறிக்கொள்வதும்,
நியாயமாக நடப்பவர்களை 
ஏளனமாக கேலி பேசுவது,
நல்லவன் ஒருவனுக்கு அநியாயம் 
செய்பவனை தெரிந்தும்
 தெரியாததைப்  போல இருந்து 
பேசாமல் இருப்பதுவும்  ஒரு பாவமே !
மாறாக அப்படிப்பட்ட பிரகஸ்பதிக்கு 
ஆதரவாக பேசுவது முற்றிலும் 
மன்னிக்க முடியாத பரிகாரமில்லா 
பாவச் செயலாகும். 


இவ்வாறு நடப்பவர்கள் யாராக 
இருந்தாலும் சரி சற்றே 
ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் 
மனசாட்சி அப்படியா உங்களிடம் 
காணாமல் போய்விட்டது !
நேர்மையானவனாக இருப்பவர்களின் 
பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
அமைதியாக யாருக்கும் தீங்கு 
செய்யாமல் இருப்பது பெரிதல்ல
ஒருவருக்கு  நம் கண் எதிரே 
 இன்னொருவர் செய்யும் 
அக்கிரமத்தை  பார்த்தும் 
பார்க்காதது போல் எனக்கென்ன 
என்று அதை பற்றிய கவலை 
சிறிதும் இல்லாமல் இருப்பது 
தான் நினைத்தால் அந்த 
அக்கிரமத்தை நடக்க விடாமல் 
செய்திருக்க முடியும் என்ற 
நிலையில் இருப்பவர்கள் 
நமக்கென்ன அவர்கள் எப்படியோ 
போகட்டும் என்று  சொ(செ)ல்வது 
அது அந்த அக்கிரமக்காரனை விட 
ஒரு பங்கு மேலோங்கி நிற்பதாகும்.


தயவு செய்து இது மாதிரி 
குணம் உள்ள நீங்கள் 
உங்களை சிறிதும் காலம் 
தாமதிக்காமல் மாற்றிக்கொண்டு 
உங்களிடம் உள்ள 
நேர்மையானவர்களை  நிம்மதியாக 
வாழ விடுங்கள்! வாழ விடுங்கள் !
நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டியது 
வேறு ஒன்றுமில்லை.
ஏனோ இதை செய்ய 
தயக்கம் காட்டுகிறீர்கள்!













0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'