பாசத்தில் தாயாய்
கற்பிப்பதில் தந்தையாய்
உபசரிப்பதிலே உடன்பிறப்பாய்
மனதளவில் குழந்தையாய்
படிப்பதிலே புலியாய்
சுறுசுறுப்பிலே எறும்பாய்
வீரத்திலே கட்டபொம்மனாய்
பிறருக்கு உழைப்பதிலே காமராஜராய்
சேவை செய்வதிலே அன்னை தெரசாவாய்
உருவத்திலே அக்கால துறவியாய்
ஞாபக சக்தியில் யானையாய்
தந்திரத்திலே நரியாய்
அழகிலே புள்ளிமானாய்
ஓடுவதில் சிறுத்தையாய்
நீந்துவதிலே மீனாய்
பிறர்க்கு கொடுப்பதிலே கர்ணனாய்
ஆட்(ள்) கொள்(ல்)வதிலே கண்ணனாய்
வயதிலே மார்க்கண்டேயனாய்
பக்தியில் அனுமனாய்
அரவணைப்பதில் தாரமாய்
பாடுவதில் குயிலாய்
பேசுவதிலே கிளியாய்
பழகுவதிலே உண்மை நண்பனாய்
நன்றியில் நல்ல நாயாய்
சேவை எனும் சங்கத்திற்கு அரிமாவாய்
இறந்தபின் பிறர்க்கு (கண்)ஒளியாய்.
இப்படி எல்லாம் மனிதனும்
விலங்குமாக கலந்த
குணங்களை கொண்ட ஒருவன்
எப்பொழுது தெய்வம் என
மதிக்கப்படுவான் என்றால்
எந்த நிலையிலும் பிறர்க்கு
மனதளவிலும் துரோகம்
செய்யாமல் இருக்கின்றானோ
அப்பொழுதே அவன் இப்பூமியிலே
வாழும் போதே பிறரால்
தெய்வமென மதிக்கப்படுகிறான்!
அதற்காக அவனையே கடவுள்
என்று சொல்லி அவனை
வணங்குவதும் தவறு!
மேற்கண்ட தவற்றை
நம்மில் நிறைய பேர்
இன்றும் செய்து கொண்டு தான்
இருக்கின்றார்கள்.
இவர்களால் தான் அவர்கள்
வேறு விதமான செய்கையில்
ஈடுபட்டு கடவுளாக மதிக்க
வேண்டிய அவர்கள் பின்பு
மனிதனாக கூட வாழ்வதற்கு
அருகதை இன்றி அவமானத்தை
தாங்கி இறந்து போகும்
சூழ்நிலை ஏற்படுகிறது.
ஆகவே ஒரு மனிதனை எந்த
சூழ்நிலையிலும் மனிதனாகவே
பார்க்கவேண்டுமே தவிர
தெய்வமாக எண்ணி
வணங்க கூடாது! வணங்கவே கூடாது !
ஆம் எந்த நிலையிலும் மனிதன் கடவுளாக முடியுமா? என்பதை விட நாம் அதுமாதிரி உள்ளவரை கடவுள் என்று சொல்லி வணங்குவது கூடாது. நல்ல ஒரு ஆழ்ந்த சிந்தனை.
பதிலளிநீக்குஓ .. ஓ... பேஸ் .. பேஸ்.. இன்னாப்பா இது சூபராகீது. எப்படிப்பா இதெல்லாம் ரூம் போட்டு யோசிபீங்களா? இத்த படிக்கும் போது ஒரே குசியாகீது. இது மாதிரி நெறைய எழுது பா! இன்னா!
பதிலளிநீக்குசூப்பர் கருத்து. உங்கள் எல்லோரையும் வரவேற்கிறேன். நன்றி.
பதிலளிநீக்கு