செவ்வாய், 25 ஜனவரி, 2011

மனிதநேயம் மறை(ற)ந்து வருகிறது(தா?)

இக்கலியுகத்தில் மனிதநேயம்
என்ற ஏதோ ஒன்று என்றோ
இருந்ததாக முன்னொரு
காலத்தில் வாழ்ந்த கேள்விபட்ட
யாரோ ஒருவர் யாரிடமோ
எப்பொழுதோ சொல்ல கேள்வி!

இதிலிருந்தே மனிதநேயம்
படும் பாட்டை நம்மில்
சிலபேரால்  யூகிக்க முடிகிறது.
இது சத்தியமான, கொடுமையான,
மறுக்கமுடியாத, மன்னிக்கமுடியாத
அசைக்கமுடியாத  உண்மையாகும்.

அதற்காக மனிதர்கள்
எல்லோரையும் ஒட்டுமொத்தமாக
குறை கூறவில்லை, மேற்சொன்ன
அந்த சிலபேரில்லாமல் மீதமுள்ள
பல பேர்களுக்காக இதை
சொல்ல விரும்புகின்றேன்!

நம் கண் முன்னால்
யாரோ ஒருவருக்கு கொடுமை
ஒன்று நடக்கும் பட்சத்தில்
அதை கண்டும் காணாமல்
செல்வது என்பது மனிதநேயத்தின்
உச்ச கட்ட வீழ்ச்சியை காட்டுகிறது!                                                                                            


யாரோ ஒருவரை நாம்
பார்க்கும்போதே நம்மை
அறியாமலேயே அவருக்கு
அவர் கேட்காமலேயே 
நா(தா)மாகவே  முன்வந்து உதவி
செய்வது என்பது தான்
மனிதநேயத்தின் இமாலய வளர்ச்சி!

பாத்திரம் அறிந்து
பிச்சை இடுவது என்பது
மிகப்  பெரிய தவறாகும்.
நினைத்த மாத்திரத்தில்
என்ன கொடுக்க நினைக்கிறோமோ 
அதை கொடுத்து விடவேண்டும்!
பாத்திரம் அறிந்து கொடுக்க கூடாது!

ஒருவன் பிச்சை கேட்கும்
பொழுதே அவன் பாதி
இறந்து விடுகின்றான்
அதை தான் நாம் பிறரிடம்
இருந்து பெற்று உண்பவர்களை
இறந்து உண்கிறார்கள் என்கிறோம்!


அப்பேற்பட்ட இறந்து
வாழ்பவர்களை நாம்
மேலும் கேலி, கிண்டல்
செய்யாமல் முடிந்தால்
உதவி செய்து இல்லையென்றால்
பரவாயில்லை அமைதியாக
நாம் இருப்பதுவும் ஒருவகை
மனிதாபிமானமுள்ள மனித நேயமே!

இக்காலத்தவர்கள் ஒருசில பேர்கள்
பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும்
ஏன் தான் பெற்ற பிள்ளைகளுக்கும்
தன் கடமையை செய்ய
தயங்குபவர்கள் வாழும் பூமி இது!
இது போன்ற மனித மனம் இல்லாத
ம(மா)க்களிடம் நாம் மேற்சொன்ன
மனிதநேயத்தை எதிர்பார்ப்பது
எந்த வகையில் நியாயமாகும்!




0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'