திங்கள், 31 ஜனவரி, 2011

கோபம் ஒரு பொக்கிஷ{மே}ம்(மா) ! ?

கோபம் நம் எல்லோருக்குள்ளும் 
இருக்கவேண்டிய விலை மதிப்பில்லா
யாருக்கும் அவ்வளவு எளிதில் 
கிடைக்கதற்கு அறியா பொக்கிஷம்,
தேடக்கிடைக்காத திரவியம்.

இது  இயற்கையின் அற்புதமான 
பிறப்பிலேயே கிடைக்கவேண்டிய 
அருமையான ஒரு வரப்ரசாதம்.
சொல்லியும் வருவதில்லை இது 
பிறரிடம் இருந்து கற்றும் தெரிவதில்லை !

கோபம் ஆம் நம்முடைய 
வீட்டுக்கு வருகின்ற (என்றாவது)
சிறப்பு விருந்தினரப்போல இருக்க 
வேண்டுமே அல்லாது அழையா
விருந்தாளியாக இருக்ககூடாது !

நாம் மனிதன் என்பதை 
நிரூபிப்பதற்கும் (தேவைப்பட்டால்)
நமக்கு நல்லது எது, கெட்டது எது,
நல்லவர்கள், தீயவர்களை ஆராயும்
பண்பையும் நமக்குள் வளர்க்கும்.

கோபப்படாதவன் கோமானாக 
இருந்தால் கூட அவன் 
கோமாளியாக அனைவராலும் 
எண்ணி எள்ளி நகையாடி 
கேலிகுள்ளாகி அவமானப்பட நேரிடும்.

நாம் நல்லவர்தான், நேர்மயானவர்தான்  
என்பதை இவ்வுலத்திற்கு 
பறைசாற்ற (அவசியப்பட்டால்)
நமக்கு உதவும் அரியபெரும் 
அஹிம்சை வழி ஆயுதமும் இதுவே!

நகைச்சுவையை கேட்டால்
சிரிக்கவேண்டும், துக்கம் வந்தால் 
அழ வேண்டும், பிறரின் துன்பம் 
கண்டு மனம் வருந்த வேண்டும்,
அநியாயத்தை கண்டால் கோபப்பட வேண்டும்.

நவ(ஒன்பது)ரசத்திலே ஒரு 
ரசமாம் இந்த கோப(ம்) ரசத்தையும் 
பருகி(அளவோடு), அதனை 
பயன்படுத்தும் முறையை கற்றுக்கொண்டால்
மனிதன் மனிதாக வாழ்வது எளிது!

கோபம் அஹிம்சைக்கு மாறானது அல்ல!
மாற்றாக நம்மை நாமே 
பாதுகாத்து கொள்ள யாருக்கும்
சிறிதும் தீங்கு விளைவிக்காத
நம் கையில் உள்ள ஒரு (பூ) ஆயுதமே ! ! !  

 

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'