வியாழன், 3 பிப்ரவரி, 2011

எல்லோருக்கும் எல்லாம் வாய்க்குமா! (?)

பெண்ணுக்கு  பொறுப்பான கணவன்  கிடைக்க வேண்டும்
ஆணுக்கு  குணமுள்ள நல் மனைவி  அமைய வேண்டும்
பெற்றோருக்கு  நல்ல பிள்ளைகள்  வாய்க்க வேண்டும்
பிள்ளைகள்  மேல் என்றுமே அக்கறை உள்ள
வழி காட்டியாய்  தந்தையர்   இருக்க வேண்டும்.
கண்ணால் காணுகின்ற தெய்வமாம்  பெற்ற  தாய்   மட்டுமே
இதிலிருந்து விலகி கடவுளை விட ஒரு படி மேல் சென்று
அனைவருக்கும் உன்னதமாய் அமைந்து விடுகிறா(ள்)ர்.  


மூத்த உடன் பிறந்தோருக்கு  மரியாதையுடன் கூடிய
கீழ்ப்படிபவர்களாக இளையவர்கள்  தங்களை
தானே பக்குவப்படுத்தி கொள்ள வேண்டும்
இளையவர்கள்  முன்னேற்றத்தில்  கண்ணும் கருத்தும்
உள்ளவராய் மூத்த உடன் பிறப்புகள்
தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் !

நண்பர்கள்  என்றால் நன்கு ஆராய்ந்து  நண்பனை
தேர்ந்தெடுத்த பின் வருத்தப்படாமல் தன் 
உயிரை கொடுத்து நண்பனை காப்பாற்றும்
நட்புக்கு  இலக்கணமாக இருக்க வேண்டும் !
இவை அனைத்தும் ஒரு சேர யாருக்கு
வாய்க்கிறதோ அவர்களே கொடுத்து வைத்தவர்கள் ! !

இது தான் இங்கு உள்ள கேள்வியே ?
இவை அனைத்திலும் எதாவது ஒன்றாவது 
குறை உள்ள மனிதன் தான் வாழ்ந்து                
கொண்டு இருக்கின்றான், காரணம்
அவரவர் வந்த வழியோ, அவரவர் செய்த
புண்ணியமோ, பாவமோ! இல்லை
எல்லோரும் சொல்லக்கூடிய விதியோ !

இதனால் தான் கடவுளை கூட சில
சமயங்களில் நம்மில் சிலர் நொந்து
கொள்வதுமுண்டு , நம்மை போல உள்ள
ஆசாமிகளுக்கு வேறு யாரையும்
பழக்கமில்லையே  நொந்து கொள்வதற்கு!
கடவுள் மட்டும் தானே எந்த வித அசைவுமின்றி
அனைத்தையும் கேட்டு கொண்டிருப்பான் !

இப்படியே போகுமா நம் காலம் இல்லை
இப்படித்தான் போகுமா மீதமுள்ள காலமும்
விடையளிப்பார்  யாருமில்லாமல் தொடுக்கிறேன்
கேள்வி கணைகளை,  கேட்க கூட ஒரு
நா(தி)யும்  இல்லை  வருந்தாதீர்கள் 
வார்த்தை தடித்ததற்கு நானும்
மனிதன் தானே எவ்வளவு தான் தாங்குவேன்  !
  
 



 

3 கருத்துகள்:

  1. இப்படி எல்லோருக்கும் வாய்த்துவிட்டால் எவ்வளவோ தேவலாம். ஆனா எதாவது ஒன்னு மிஸ் ஆகிவிடுது. இது தான் வாழ்க்கையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. ஆனால் எல்லோருக்கும் இப்படியும் அமைவதில்லை அப்படியும் அமைவதுமில்லை... முழுமையாக.. ஏதோ ஒரு சிலருக்கும் மட்டுமே எல்லாமே மனநிறைவாக அமைந்துவிடுகிறது... என்ன செய்வது எல்லாவற்றிற்கும் கொடுத்து வைக்கவேண்டும்... கவிதா பிரியன் அவர்களே....

      நீக்கு
    2. ரொம்ப உண்மை, அதிலும், நெருங்கிய உறவில் பிரச்னை என்றால்,
      நிம்மதி, வாழ்வு முழுதும் இல்லை.

      நீக்கு

b:if cond='data:post.embedCommentForm'