ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

தமிழ் வலைப்பதிவர்களின் முதல் சங்கமம்...


வரலாற்றிலொரு சிறப்புமிகு பொன்னாளாம்
தமிழ் வலைப்பதிவர்களின் திருநாளாம்...
சந்தோஷ கடலில் பதிவர்கள் மிதந்த நாளாம்...
பதிவர்களோடு ஏனையோரும் மகிழ்ந்த நாளாம்...
ஆவணி மாதம் பத்து  என்பதே அந்த சுபநாளாம்...

இனி வருமா அதுபோன்றவொரு நன்னாளே...
எத்தனை வந்தாலும் அவை இதனுக்கு பின்னாலே...
நிகழ்ச்சி இப்படி சிறக்குமென்று யாரும் எண்ணாமலே...
மிக அற்புதமாய் முடிந்தும்  போனது  நண்பர்களாலே...
இத்தனையும் சாத்தியமானது தமிழ்வலைகளாலே...

பதிவர்களின் திருநாளில் மேலும் ஒரு சிறப்பாக ...
கவிதாயினி சசிகலா தன் எண்ணங்களை எழுத்தாக...
வடித்தார்கள் முடிவில் உருவானதோ நல்தென்றலாக...
தென்றலெனும் கவிதை நூலும் வெளிவந்தது சிறப்பாக...
வெளியிட்டவரோ பட்டுக்கோட்டை பிரபாகர் அழகாக...

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அன்பான வாழ்த்தையும் மனநிறைவையும் பார்க்கும்போது உண்மையிலேயே எனது நெஞ்சம் குளிர்கின்றது சமீரா...உங்களுக்கு என்னுடைய தலை சாய்ந்த வணக்கத்தையும் நன்றியையும் உள்ளன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்....வாழ்க வளர்க...

    பதிலளிநீக்கு

b:if cond='data:post.embedCommentForm'