செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

கைவிடாதே பெற்ற தெய்வங்களை...

ஆண் மகனாய் பிறந்துவிட்ட
எனதருமை சிங்கங்களே...
உங்களுக்காக உங்களிடம்
உங்களை பற்றி பேசவந்துள்ளேன்.....
உலகிற்கு உனை அறிமுகப்படுத்திய
பெற்றோர்களை நீயும்
பரிதவிக்க முதியோர் இல்லத்தில்
விடுவதும் நியாயம்தானா...

உனக்கு சுவாசம் தந்த அன்னையின்
சுவாசம் இருக்கும்வரையாவது
அந்த கண்கண்ட தெய்வத்தின்
காலடியே கதி என்று கிடந்துவிடு....
தத்தி தத்தி நீ நடந்த அழகை
ரசித்து பார்த்த உன் பெற்றோர்கள்   
தள்ளாத வயதில் நடப்பதை
உடன் இருந்து பார்க்கவேண்டாமா...

பிறக்கும்போது உன்னோடு பிறந்த
மனசாட்சி என்ற ஒன்றும்
எப்படியடா நீ உயிருடன்
இருக்கும்போதே இறந்து போனது ...
மனசாட்சி இல்லாதவனை
மனிதனென்றே ஏற்காதே இவ்வுலகம்
பாவம் உனக்கெங்கே தெரியப்போகிறது
மனிதனாய் நீ இருந்தால்தானே....

பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு செய்ததை
ஒருபோதும் சொல்லி காட்டுவதில்லை
சொல்லிக்காட்டுவதற்கு கூட பிள்ளைகள்
பெற்றோருக்கு செய்வதில்லையே..
ஔவை பாட்டியோ இப்போது
இருந்திருந்தால் கொடுமையின்
உச்சம் என்று இதனையல்லவா
வரிசைப்படுத்தி பாடியிருப்பாள்...

நம்செம்மொழிக்கு சொந்தமான
முருகக்கடவுளையே நிற்கவைத்து
கேள்விகேட்ட ஔவைபாட்டி இந்த
பிள்ளைகளை விட்டா வைத்திருப்பாள்....
தமிழால்
சொல்லால் வசைபாடியே
கொல்லாமல் வதைத்திருப்பாள்
பெற்றோர்களை விலக்கிவைத்து விட்டு
எப்படியடா உன்னால் நிம்மதியாக
உறங்கத்தான் முடிகிறது...

ஒருசிலர் சொல்கிறார்களே சோமபானம்
சுராபானம் என்று அதனை பருகிவிட்டா
நித்தமும் நீ நித்திரையை தழுவுகின்றாய்....
பால் குடித்த மிருகம் என்று

உனையும் சொன்னால்
உண்மையான மிருகங்களும்
என்மேல் கோபம் கொள்ளுதடா.....

இப்படி ஒரு ஈனப்பிறவியை
எங்களோடு ஒப்பிடாதே என்று....
எத்தனை ஜென்மம் நீ எடுத்தாலும்
செய்த இந்த பாவத்திற்கு
மன்னிப்பு கிடையாது என்பதே
சத்தியமான உண்மையடா - இருந்தும்
மன்னித்து ஏற்கும் ஒரே தெய்வம்
அதுவும் உன் அன்னைதானடா...
பெற்றோர்களுடன் வாழ்ந்து இறுதிவரை
மனிதனாக இருந்து விடு....==============================================================

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'