புதன், 29 ஆகஸ்ட், 2012

தாய் நாட்டு சுதந்திரம்....சும்மா வரவில்லையே இந்த
இனிய சுதந்திரம் இங்கே...

இதுகூட தெரியவில்லையே
இன்னும் நம்மில் சிலருக்கிங்கே...

கணக்கில்லா எவ்வளவோ மக்கள்
வாழ்ந்திருந்தனர் இங்கே...
அதிலும் தன்னையே இழந்தவர்கள்
ஒருசிலர்தானே இங்கே...
சுதந்திரம் என்பதே தியாகத்தால்
மட்டுமேதானே சாத்தியமிங்கே...

எத்தனை எத்தனை தியாகிகள்
நம்மிடையே அன்று பிறந்தும்...
சுதந்திரம் என்ற சுவாசத்தை
எல்லோரும் சுவாசிக்க நினைந்தும்...  
அதற்காக தன் பொன்னான இன்பமெனும்
நல்வாழ்வுதனை இழந்தும்...
இன்றும் நம் உள்ளத்தில் இறவாமல்
வாழ்கின்றனரே இறந்தும்...
அவர்களை நினைவு கூறா
மனிதர்கள் இறந்தவர்களே இருந்தும்...

சுதந்திரம் வேண்டும் என்று ஒரு
சிலர் யோசித்த பிறகுதானே...
பொய்யான மெய்யெனும் உடம்பு
வெந்ததின் விளைவுதானே...
நாட்டின் மீதுள்ள பற்றெனும்
உணர்ச்சி பொங்கியதால்தானே...
எண்ணில்லா நம்மவர்கள் தானாக
முன்னெழுந்து வந்ததால்தானே...
நிம்மதியாய் நாம் இருக்கின்றோம்
இத்தனைக்கும் பின்புதானே...

போராடும் முறையில் தான்
எண்ணற்ற வேறுபாடுகள் பிறந்தது...
வெற்றியின் நோக்கம் என்னவோ
ஒன்றுக்குத்தானே இருந்தது...
வீரமுழக்கம் செய்த நம் தீரர்களின்
பேச்சில் அணலும் பறந்தது....
தணலில் கருகிய பரங்கியர் கூட்டம்
மண்ணை கவ்வியே போனது...
பொறுமை எனும் அஹிம்சா
சக்திதானே இறுதியில் வென்றது...

*************************************************************************
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*************************************************************************

2 கருத்துகள்:

 1. அன்புடையீர்,
  உங்களை பதிவர் விழாவில் சந்தித்தது மிகவும் சந்தோஷாம்.
  என் பதிவை ranjaninarayanan.wordpress.com இல் படிக்கவும்.
  அன்புடன்,
  ரஞ்ஜனி

  பதிலளிநீக்கு
 2. எனக்கும் சந்தோசம் தான்..கண்டிப்பாக பார்த்து அதற்கேற்ற கருத்துரையும் வழங்குகின்றேன்...நன்றி வணக்கம்....

  பதிலளிநீக்கு

b:if cond='data:post.embedCommentForm'