துள்ளித்திரிந்த நானும் பருவமதை
காலத்தே அடைந்ததால்...
பெரியோர்களின் முயற்சியால் முறையே
நானும் புகுந்த வீட்டை சேர்ந்ததால்...
யாரோ பெற்ற பெண் பிள்ளை தானே
என அவரும் எனை நினைத்ததால் ....
பிறந்த வீடு செல்ல அனுமதி
எனக்கு தொடர்ந்து மறுத்ததால்....
என் மனதும் மறக்க முடியாமல் ஏங்கி
தவித்தே மறத்தே போனதால்...
மறக்கவேண்டிய ஒரு மனநிலையில்
நானும் ஒருவாரே தள்ளப்பட்டதால்...
யாரிடமும் சொல்லமுடியா துன்பமதை
எனக்குள்ளே போட்டு புழுங்கியதால்....
தன்னலமே பார்த்த என் கணவரும்
என் நலத்தையும் எண்ணி பார்க்காததால்...
கடைசிவரை நான் பிறந்தவீட்டில் ஆசையாய்
ஓரிரு நாள் கூட ஓய்வாக காலம் கழிக்காததால்.....
ஆம் - மற்றவர்கள் பார்வையில் நானும் ஓர்
இரக்கமற்றவள் பெற்றோர்களை காணாததால்...
இப்படியே ஓடின என் காலங்களும் என் மகளும்
இப்போதோ புகுந்த வீட்டில்....
எனை அனுப்ப மறுத்த என் கணவரும்
இப்போது மகளை பிரிய மனமில்லையாம்...
நினைத்துபார்த்தேன் நான் அந்த நாட்களை
அத்தனையும் கொடுமையான நொடிகளே...
தான் பெற்ற பிள்ளை என்பதால் பொங்கி
வருகிறதாம் அடக்கமுடியா அன்பும்...
செல்ல மகளை அடிக்கடி பார்க்க
துடிக்கிறதாம் அந்த பாழாய்ப்போன பாசத்தால்...
எனை பெற்ற பெற்றோருக்கும் இருந்திருக்காதா
இவருக்குள்ள அன்பும் பாசமும்...
எண்ணிப்பார்க்க மனமில்லையா..இல்லை
என் மேல் இறக்கம்தான் இல்லையா...
வேண்டாமே இதுபோன்ற பாரபட்சம்
ஆண்களே இனியாவது உணருங்களேன்...
பெண்களுக்குள்ளும் ஒரு மனதிருக்கிறது
அதை தெரிந்தும் ஏன் மதிக்க மறுக்கிறீர்கள்...
தனக்கொரு நியதி மற்றவர்களுக்கு ஒரு நியதி
ஒருபோதும் ஏற்காதே இதை இவ்வுலகம்...
காலத்தே அடைந்ததால்...
பெரியோர்களின் முயற்சியால் முறையே
நானும் புகுந்த வீட்டை சேர்ந்ததால்...
யாரோ பெற்ற பெண் பிள்ளை தானே
என அவரும் எனை நினைத்ததால் ....
பிறந்த வீடு செல்ல அனுமதி
எனக்கு தொடர்ந்து மறுத்ததால்....
என் மனதும் மறக்க முடியாமல் ஏங்கி
தவித்தே மறத்தே போனதால்...
மறக்கவேண்டிய ஒரு மனநிலையில்
நானும் ஒருவாரே தள்ளப்பட்டதால்...
யாரிடமும் சொல்லமுடியா துன்பமதை
எனக்குள்ளே போட்டு புழுங்கியதால்....
தன்னலமே பார்த்த என் கணவரும்
என் நலத்தையும் எண்ணி பார்க்காததால்...
கடைசிவரை நான் பிறந்தவீட்டில் ஆசையாய்
ஓரிரு நாள் கூட ஓய்வாக காலம் கழிக்காததால்.....
ஆம் - மற்றவர்கள் பார்வையில் நானும் ஓர்
இரக்கமற்றவள் பெற்றோர்களை காணாததால்...
இப்படியே ஓடின என் காலங்களும் என் மகளும்
இப்போதோ புகுந்த வீட்டில்....
எனை அனுப்ப மறுத்த என் கணவரும்
இப்போது மகளை பிரிய மனமில்லையாம்...
நினைத்துபார்த்தேன் நான் அந்த நாட்களை
அத்தனையும் கொடுமையான நொடிகளே...
தான் பெற்ற பிள்ளை என்பதால் பொங்கி
வருகிறதாம் அடக்கமுடியா அன்பும்...
செல்ல மகளை அடிக்கடி பார்க்க
துடிக்கிறதாம் அந்த பாழாய்ப்போன பாசத்தால்...
எனை பெற்ற பெற்றோருக்கும் இருந்திருக்காதா
இவருக்குள்ள அன்பும் பாசமும்...
எண்ணிப்பார்க்க மனமில்லையா..இல்லை
என் மேல் இறக்கம்தான் இல்லையா...
வேண்டாமே இதுபோன்ற பாரபட்சம்
ஆண்களே இனியாவது உணருங்களேன்...
பெண்களுக்குள்ளும் ஒரு மனதிருக்கிறது
அதை தெரிந்தும் ஏன் மதிக்க மறுக்கிறீர்கள்...
தனக்கொரு நியதி மற்றவர்களுக்கு ஒரு நியதி
ஒருபோதும் ஏற்காதே இதை இவ்வுலகம்...
பெண்களுக்குள்ளும் ஒரு மனதிருக்கிறது
பதிலளிநீக்குஅதை தெரிந்தும் ஏன் மதிக்க மறுக்கிறீர்கள்...
பெண்களுக்காக ஒரு ஆணின் குரல் மகிழ்ச்சி நன்றி.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபெண்களுக்காக எப்போதுமே ஆண்களின் குரல் தான் மேலோங்கி நிற்கும்.. ஓரிரு ஆண்களின் செய்கையை கணக்கில் கொள்ளாதீர்கள் சசி கலா அவர்களே... நன்றி தங்களின் சந்தோசத்தில்....
பதிலளிநீக்குநிறைய வீடுகளில் நடக்கும் உண்மையான நிகழ்ச்சி
பதிலளிநீக்குஅதற்கான உங்கள் குரல் கண்டு மகிழ்சி.....
பாராட்டுக்கள் நண்பரே.......... அருமை.
நன்றி கோமதி அவர்களே.. தாங்கள் சொல்வதும் உண்மைதான்.. இதுபோன்று எவ்வளவோ பெண்கள் புகுந்த வீடு சென்ற பிறகு பிறந்த வீட்டை நினைத்து பார்க்கமுடியாத கொடூர நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள். காரணம் ஒரு சில ஆண்களின் சுயநலம்,ஆணாதிக்கம் இதுபோன்ற ஒன்றுமில்லா வரட்டுத்தனமான முரட்டு புத்தியால். வருடக்கணக்கில் இந்த கொடுமையை அனுபவிக்கும் பெண்கள் எண்ணில் அடங்காது...
பதிலளிநீக்கு