புதன், 5 செப்டம்பர், 2012

அறிவோமே தாயின் மனநிலை........

நான் பொறந்த காலத்துல
உலகமொன்னும் முன்னேறல
சொத்து பத்து எல்லாமிருந்தும்
அப்பா ஏனோ மூனாவதுக்கு மேலே  
எனையும் படிக்கத்தான் வைக்கல...

செல்ல மகளாய் இருந்ததால்
வீட்டிலேயே இருக்க வைத்தனரே...
வளர்ந்தேன் நானும் காலத்தை போல ...
இவர்தான் கணவர் என்று சொல்லி
கல்யாணமும் இனிதே நடந்தேறியது...

எனைப்போலவே எனக்கும் பெண்
குழந்தை பிறந்தே இனிதாய் அதை
வளர்த்தோம் உயரிய கல்வியோடு...
கணவரும் குழந்தைகளுமே எனது
வாழ்க்கை என்றே ஆகிப்போனது...

ஓய்வென்பதே அறியாமல் ஓடி ஓடி
உ(இ)ழைத்தேன் என் பாதங்களும் தேய
வயதின் முதிர்ச்சியால் நோய்வந்து
எனையும் சேர்ந்து சொந்தங்கள் போல   
பிரியமறுத்து இறுதிவரை என்னுடனே..

திருமணம் செய்து வைத்த மகளை
புகுந்தவீடு அனுப்பிவிட்டு ‘அப்பாடா

என்று சொல்லி ஓரிரண்டு வருஷம் கூட
ஆகவில்லை பாத்துக்கோ உன் பேரனை  
என்றே விட்டுச்சென்றால் என்மகளும் என்னிடம்...

மனதில் சந்தோசம் இருந்தும் ஒத்துழைக்க
மறுக்கின்றன என் வலுவிழந்த உடல்கள்...
என்னை போலவே எத்தனையோ பாட்டிகளும்
இப்படியே இருந்துவிட்டு யாரிடமும் சொல்லாமல்..
புரிந்து கொள்ளுங்களேன் எனதருமை மகள்களே...


======================================================

6 கருத்துகள்:

 1. கணவரும் குழந்தைகளுமே எனது
  வாழ்க்கை என்றே ஆகிப்போனது...
  அருமையான வரிகள்.

  பதிலளிநீக்கு
 2. நன்றி தங்களின் பாராட்டுக்கு சசி கலா அவர்களே...

  பதிலளிநீக்கு
 3. நிறைய தாய்மார்களின் நிலைமை இதுதான்....இல்லையென்றால் பெற்ற மக்களின் அன்பை இழக்க வேண்டியிருக்குமோ என்ற பயம்.

  பதிலளிநீக்கு
 4. அருமையாக சொன்னீர்கள் கோமதி அவர்களே...
  தாய்க்கு பயமென்று சொல்வதைவிட பாசமே அங்கு மேலோங்கி நின்று தன் உடல் உபாதைகளை தாங்கி செய்ய தோனுகிறது... அந்த தாயின் பாசத்தை பிள்ளைகள் புரிந்து நடந்தால் அதுவே போதும்...

  பதிலளிநீக்கு
 5. பொதுவாக வயதாதிக்கத்தில் தனிமையை விட கொடுமை எதுவும் இல்லை,,
  இதில் தாயின் மனநிலை பற்றி சொல்லவும் வேண்டுமோ.?

  நல்ல பகிர்வு சகோ,,

  பதிலளிநீக்கு
 6. உண்மைதான் தாங்கள் சொல்வது. தனது கஷ்டத்தை எப்போதும் வெளியில் காட்டிக்கொள்ளாத உயரிய உள்ளம் கொண்டவர்கள் தான் தாய். நாம் தான் அதை புரிந்து நடந்து அவர்களை பார்த்துக்கொள்ளவேண்டும்... நன்றி தங்களின் கருத்திற்கு...

  பதிலளிநீக்கு

b:if cond='data:post.embedCommentForm'