செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இதுவெல்லாம் ஒரு வாழ்க்கையா...படத்தில் உள்ள குழந்தைகளை
கீழே சொல்லப்பட்டிருக்கும்
பணத்தால் மட்டுமே உயர்ந்து
குணத்தால் கீழ்த்தரமானவர்களாக

உலகத்தை மனித உருவில் வலம்
வரும் எனதருமை மா மாக்களே
சற்றே குனிந்துதான் பாருங்களேன்...
இவர்களுக்கும் உங்களுக்கும் என்ன
தான் வித்தியாசம் ஒரு நிமிடம்
யோசித்து தான் பாருங்களேன்...

உங்களுக்கே நீங்கள் எவ்வளவு
தரமானவர்கள் என்று அப்போது புரியும்...

வாழ்க்கையே என்னவென்று தெரியாமல்
கையேந்தும் இந்த மழலைகளுக்கும்

எல்லாமிருந்தும் கையேந்தும் உங்களுக்கும் 
என்ன வேறுபாடு இருக்கிறது...

திருப்தி என்ற ஒன்றில்லாமல்
எப்படி எப்படி எல்லாம் முடியுமோ
அப்படி அப்படி எல்லாம்
குறுக்கு
வழியில் பணம் சம்பாரித்து

அதிவிரைவில் பணக்காரனாக
வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு 
தெரியுமோ அவர்களுக்கு ஆயுள்
குறைவென்று - அதனால் தான்

எப்படியாவது எந்த வகையிலாவது
பணத்தை சேர்த்துவிட வேண்டுமென்று
அலைகிறார்களோ பின்னால் நடக்கப்
போவதை முன்னமே தெரிந்திருப்பதால் 
ஒருவகையில் இவர்களும் தீர்க்கதரிசிதான்  !

0 கருத்துகள்:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்

கருத்துரையிடுக

b:if cond='data:post.embedCommentForm'