திங்கள், 31 ஜனவரி, 2011

கோபம் ஒரு பொக்கிஷ{மே}ம்(மா) ! ?

கோபம் நம் எல்லோருக்குள்ளும் 
இருக்கவேண்டிய விலை மதிப்பில்லா
யாருக்கும் அவ்வளவு எளிதில் 
கிடைக்கதற்கு அறியா பொக்கிஷம்,
தேடக்கிடைக்காத திரவியம்.

இது  இயற்கையின் அற்புதமான 
பிறப்பிலேயே கிடைக்கவேண்டிய 
அருமையான ஒரு வரப்ரசாதம்.
சொல்லியும் வருவதில்லை இது 
பிறரிடம் இருந்து கற்றும் தெரிவதில்லை !

கோபம் ஆம் நம்முடைய 
வீட்டுக்கு வருகின்ற (என்றாவது)
சிறப்பு விருந்தினரப்போல இருக்க 
வேண்டுமே அல்லாது அழையா
விருந்தாளியாக இருக்ககூடாது !

நாம் மனிதன் என்பதை 
நிரூபிப்பதற்கும் (தேவைப்பட்டால்)
நமக்கு நல்லது எது, கெட்டது எது,
நல்லவர்கள், தீயவர்களை ஆராயும்
பண்பையும் நமக்குள் வளர்க்கும்.

கோபப்படாதவன் கோமானாக 
இருந்தால் கூட அவன் 
கோமாளியாக அனைவராலும் 
எண்ணி எள்ளி நகையாடி 
கேலிகுள்ளாகி அவமானப்பட நேரிடும்.

நாம் நல்லவர்தான், நேர்மயானவர்தான்  
என்பதை இவ்வுலத்திற்கு 
பறைசாற்ற (அவசியப்பட்டால்)
நமக்கு உதவும் அரியபெரும் 
அஹிம்சை வழி ஆயுதமும் இதுவே!

நகைச்சுவையை கேட்டால்
சிரிக்கவேண்டும், துக்கம் வந்தால் 
அழ வேண்டும், பிறரின் துன்பம் 
கண்டு மனம் வருந்த வேண்டும்,
அநியாயத்தை கண்டால் கோபப்பட வேண்டும்.

நவ(ஒன்பது)ரசத்திலே ஒரு 
ரசமாம் இந்த கோப(ம்) ரசத்தையும் 
பருகி(அளவோடு), அதனை 
பயன்படுத்தும் முறையை கற்றுக்கொண்டால்
மனிதன் மனிதாக வாழ்வது எளிது!

கோபம் அஹிம்சைக்கு மாறானது அல்ல!
மாற்றாக நம்மை நாமே 
பாதுகாத்து கொள்ள யாருக்கும்
சிறிதும் தீங்கு விளைவிக்காத
நம் கையில் உள்ள ஒரு (பூ) ஆயுதமே ! ! !  

 

வியாழன், 27 ஜனவரி, 2011

Blogger Buzz: Monetize your site with Google Affiliate Network

Blogger Buzz: Monetize your site with Google Affiliate Network: "Guest post by Google Affiliate Network (GAN) There are lots of great ways to make money from your blog. One of those ways is to use an affi..."

புதன், 26 ஜனவரி, 2011

இது தா(னே)னா உலகம்!

மக்களின் மனம் பொதுவாகவே 
மேலோட்டமாக பார்த்து முடிவு 
எடுப்பது, ஆழ்ந்த சிந்தனை இல்லாது 
கண்ணால் பார்ப்பதை மட்டுமே 
கண்டு வியப்பில் ஆழ்ந்து 
மன மகிழ்ச்சி அடையும் தன்மையுள்ளவர்கள்!

எடுத்துக்காட்டுக்கு உலகத்திலேயே 
துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடம் 
எவ்வளவு உயரம் என்றே எல்லோரும்
வியந்து மேல்நோக்கி பார்க்கின்றனர்
யாராவது அந்த கட்டிடத்தின் உயரத்திற்கு 
எவ்வளவு அடித்தளம் போட்டிருப்பார்கள் 
என்று எண்ணி பார்த்தது உண்டா!

இப்போதுள்ள நாட்டு நடப்பும் இதுதான் 
எவன் ஒருவன் பிறர் முன்னேற்றத்திற்கு
பாடுபடுகின்றானோ அவன் ஏணி 
போல நின்ற இடத்திலேயே காலம் 
முழுவதும் நின்று தான் முன்னேறாமல் 
கடைசி வரை யாருக்கும் தெரியாமலேயே 
மண்ணுக்குள் மறைந்து விடுவதுண்டு!




வியர்வையின் வாசனை !!

கருங்கல்லே உனக்கு வலிக்கும் என்று
நான் நினைத்திருந்தால் நீ இப்படி (உதாரணத்திற்கு)
கன்னியாகுமரியிலே பார் போற்றும்
ஐயன் வள்ளுவனாக கம்பீரமாக நின்று
காட்சி கொடுத்திருக்க மாட்டாய்!                          

உனக்கு எவ்வளவு வலி இருந்ததோ                 
அதே வேதனை என் கைகளுக்கும்
ஏற்பட்டிருக்கும் என்பதை ஏன் எண்ணி
பார்க்க மறந்தாய்! உன்னை அறிமுகப்படுத்துவதற்கு
நான் என் முகவரியை தினம் தினம்
மறந்த நாட்கள் அதிகமுண்டு!                            


உயிரற்ற உனக்கு உயிர் கொடுக்க
என் உயிர் மெய் அனைத்தையும்
வருத்தி உன்னை உருவாக்கினேன்.
உன் காலடியில் நான் நின்று அன்னாந்து
உனை பார்க்கும் போது தான் நான்
என்  உ(வி)யர்வை  எண்ணி மகிழ்கின்றேன் !




செவ்வாய், 25 ஜனவரி, 2011

மனிதநேயம் மறை(ற)ந்து வருகிறது(தா?)

இக்கலியுகத்தில் மனிதநேயம்
என்ற ஏதோ ஒன்று என்றோ
இருந்ததாக முன்னொரு
காலத்தில் வாழ்ந்த கேள்விபட்ட
யாரோ ஒருவர் யாரிடமோ
எப்பொழுதோ சொல்ல கேள்வி!

இதிலிருந்தே மனிதநேயம்
படும் பாட்டை நம்மில்
சிலபேரால்  யூகிக்க முடிகிறது.
இது சத்தியமான, கொடுமையான,
மறுக்கமுடியாத, மன்னிக்கமுடியாத
அசைக்கமுடியாத  உண்மையாகும்.

அதற்காக மனிதர்கள்
எல்லோரையும் ஒட்டுமொத்தமாக
குறை கூறவில்லை, மேற்சொன்ன
அந்த சிலபேரில்லாமல் மீதமுள்ள
பல பேர்களுக்காக இதை
சொல்ல விரும்புகின்றேன்!

நம் கண் முன்னால்
யாரோ ஒருவருக்கு கொடுமை
ஒன்று நடக்கும் பட்சத்தில்
அதை கண்டும் காணாமல்
செல்வது என்பது மனிதநேயத்தின்
உச்ச கட்ட வீழ்ச்சியை காட்டுகிறது!                                                                                            


யாரோ ஒருவரை நாம்
பார்க்கும்போதே நம்மை
அறியாமலேயே அவருக்கு
அவர் கேட்காமலேயே 
நா(தா)மாகவே  முன்வந்து உதவி
செய்வது என்பது தான்
மனிதநேயத்தின் இமாலய வளர்ச்சி!

பாத்திரம் அறிந்து
பிச்சை இடுவது என்பது
மிகப்  பெரிய தவறாகும்.
நினைத்த மாத்திரத்தில்
என்ன கொடுக்க நினைக்கிறோமோ 
அதை கொடுத்து விடவேண்டும்!
பாத்திரம் அறிந்து கொடுக்க கூடாது!

ஒருவன் பிச்சை கேட்கும்
பொழுதே அவன் பாதி
இறந்து விடுகின்றான்
அதை தான் நாம் பிறரிடம்
இருந்து பெற்று உண்பவர்களை
இறந்து உண்கிறார்கள் என்கிறோம்!


அப்பேற்பட்ட இறந்து
வாழ்பவர்களை நாம்
மேலும் கேலி, கிண்டல்
செய்யாமல் முடிந்தால்
உதவி செய்து இல்லையென்றால்
பரவாயில்லை அமைதியாக
நாம் இருப்பதுவும் ஒருவகை
மனிதாபிமானமுள்ள மனித நேயமே!

இக்காலத்தவர்கள் ஒருசில பேர்கள்
பெற்றோர்களுக்கும், உடன் பிறந்தவர்களுக்கும்
ஏன் தான் பெற்ற பிள்ளைகளுக்கும்
தன் கடமையை செய்ய
தயங்குபவர்கள் வாழும் பூமி இது!
இது போன்ற மனித மனம் இல்லாத
ம(மா)க்களிடம் நாம் மேற்சொன்ன
மனிதநேயத்தை எதிர்பார்ப்பது
எந்த வகையில் நியாயமாகும்!




புதன், 19 ஜனவரி, 2011

இ(எ)ப்படியும் பேசலாமா !

பெற்றோர்கள்  தன் குழந்தைகளுக்காக 
செய்யும் அனைத்து காரியங்களும்
வளர்ப்பில் இருந்து அவர்கள்
சுயமாக சம்பாரிக்கும் வரை
தான் குழந்தைகளுக்காக ஆற்றும்
எல்லா செயல்களும் அதை
கடமை என்று வைத்துக்கொண்டாலும் சரி!

பெற்றோர்கள் எந்த காலக்கட்டத்திலும்
எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் யாரிடமும்
தாம் தன் குழந்தைகளுக்கு
செய்த எந்த செயலையும்
அதாவது நான் என் குழந்தைகளுக்கு
இதை செய்தேன் அதை செய்தேன்
என்று  சொல்வதில்லை, அவர்களுக்கு
அதை பற்றிய சிந்தனை
ஒரு துளி கூட தன் சிந்தையில்
இருக்கவே இருக்காது.

ஆனால் எல்லா பெற்றோர்களும்
தன் குழந்தைகளுக்காக பட்ட
கஷ்டங்கள் சொன்னால் எண்ணில்
அடங்காது இதை கஷ்டம் என்று
நான் தான் சொல்கிறேன்
பெற்றோர்கள் எப்போதும் இந்த
வார்த்தையை பயன்படுத்தமாட்டார்கள்.


தற்போது உள்ள இந்த கலியுகத்திலோ
குழந்தைகளாக பிறந்து பெரியவர்களாக
இருக்கும் நல்லவர்கள் வல்லவர்கள்
தன்னுடைய பெற்றோர்களுக்கு செய்யும்
சேவைகளை பிறரிடம் ஒரு சில பேர்                                    
சொல்வது அல்லது எவன் ஒருவன்
தன் பெற்றோருக்கு செய்கின்றானோ
அவனை பாராட்டி பேசுவது
இந்த இரண்டு செயல்களையும்
கேட்கும் பொழுது மனதிற்கு
மிகவும் வேதனையளிக்கிறது.

தயவு கூர்ந்து பெற்றோர்களுக்கு
சேவை செய்யும் செயலை பற்றி
எவர் ஒருவரும் பேசி
பெற்ற தெய்வங்களான தாய்,
தந்தையை இழிவு படுத்த வேண்டாம்.
இதுவே பெற்றோர்களுக்கு அவர்கள்
ஆற்றும் பேருதவியாகும்.

வியாழன், 13 ஜனவரி, 2011

மனிதனா கடவுள் ! (?)

பாசத்தில் தாயாய்
கற்பிப்பதில் தந்தையாய்
உபசரிப்பதிலே  உடன்பிறப்பாய்                               

மனதளவில் குழந்தையாய்
படிப்பதிலே புலியாய்
சுறுசுறுப்பிலே  எறும்பாய்
வீரத்திலே கட்டபொம்மனாய்

பிறருக்கு உழைப்பதிலே காமராஜராய்
சேவை செய்வதிலே அன்னை தெரசாவாய்
உருவத்திலே அக்கால  துறவியாய் 
ஞாபக சக்தியில்  யானையாய்
தந்திரத்திலே நரியாய்
அழகிலே புள்ளிமானாய்
ஓடுவதில் சிறுத்தையாய்

நீந்துவதிலே மீனாய்
பிறர்க்கு கொடுப்பதிலே கர்ணனாய்
ஆட்(ள்) கொள்(ல்)வதிலே கண்ணனாய்
வயதிலே மார்க்கண்டேயனாய்
பக்தியில் அனுமனாய்
அரவணைப்பதில் தாரமாய்

பாடுவதில் குயிலாய்
பேசுவதிலே கிளியாய்
பழகுவதிலே உண்மை  நண்பனாய்
நன்றியில் நல்ல  நாயாய்
சேவை எனும் சங்கத்திற்கு அரிமாவாய்
இறந்தபின் பிறர்க்கு (கண்)ஒளியாய்.

இப்படி எல்லாம் மனிதனும்
விலங்குமாக  கலந்த
குணங்களை கொண்ட ஒருவன் 
எப்பொழுது தெய்வம் என
மதிக்கப்படுவான்  என்றால்

எந்த நிலையிலும் பிறர்க்கு
மனதளவிலும் துரோகம்
செய்யாமல் இருக்கின்றானோ
அப்பொழுதே அவன் இப்பூமியிலே
வாழும் போதே பிறரால்
தெய்வமென மதிக்கப்படுகிறான்!

அதற்காக அவனையே  கடவுள் 
என்று சொல்லி அவனை
வணங்குவதும் தவறு!
மேற்கண்ட தவற்றை
நம்மில் நிறைய பேர் 
இன்றும் செய்து கொண்டு தான்
இருக்கின்றார்கள்.

இவர்களால் தான் அவர்கள்
வேறு விதமான செய்கையில்
ஈடுபட்டு கடவுளாக மதிக்க
வேண்டிய அவர்கள் பின்பு
மனிதனாக கூட வாழ்வதற்கு
அருகதை இன்றி அவமானத்தை
தாங்கி இறந்து போகும்
சூழ்நிலை ஏற்படுகிறது.

ஆகவே ஒரு  மனிதனை எந்த
சூழ்நிலையிலும் மனிதனாகவே
பார்க்கவேண்டுமே தவிர
தெய்வமாக எண்ணி
வணங்க கூடாது!  வணங்கவே கூடாது !





திங்கள், 3 ஜனவரி, 2011

இப்படி(யும்) இருப்பது தவ(று)றா?

உயரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் 
எல்லோராலும் மதிக்கத்தக்க வகையில் 
பணத்தால் மட்டுமே உயர்ந்தவர்கள்  
அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் 
நேர்மையானவனாக இருக்கும் பட்சத்தில்
அவனை துச்சமாக நினைத்து பார்ப்பது,
நேர்மைக்கு முற்றிலும் மாறாக 
நடப்பவனை கண்டு பயந்து 
நடுங்குவது, தனக்கே அநியாயம் 
இழைக்கும் போதும் சரி அல்லது 
பிறர்க்கு அநியாயம் செய்கின்றபோதும் 
சரி அதையும் கண்டும் காணாமல்
இருப்பது, உண்மையிலேயே கஷ்டப்படுபவனுக்கு 
உதவி செய்ய யோசித்து அதற்கு 
சம்பந்தமில்லா காரணங்களை கூறி 
கொடுக்க மறுப்பது , 


உண்மை  வழி நடப்பவனை 
பற்றி துளியும் நினைத்து பார்க்காதது,
தனக்கு துரோகம் செய்பவனுக்கு 
அடங்கிப்போவதும் அதற்கு ஒரு 
காரணத்தை தானே கூறிக்கொள்வதும்,
நியாயமாக நடப்பவர்களை 
ஏளனமாக கேலி பேசுவது,
நல்லவன் ஒருவனுக்கு அநியாயம் 
செய்பவனை தெரிந்தும்
 தெரியாததைப்  போல இருந்து 
பேசாமல் இருப்பதுவும்  ஒரு பாவமே !
மாறாக அப்படிப்பட்ட பிரகஸ்பதிக்கு 
ஆதரவாக பேசுவது முற்றிலும் 
மன்னிக்க முடியாத பரிகாரமில்லா 
பாவச் செயலாகும். 


இவ்வாறு நடப்பவர்கள் யாராக 
இருந்தாலும் சரி சற்றே 
ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் 
மனசாட்சி அப்படியா உங்களிடம் 
காணாமல் போய்விட்டது !
நேர்மையானவனாக இருப்பவர்களின் 
பாவத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.
அமைதியாக யாருக்கும் தீங்கு 
செய்யாமல் இருப்பது பெரிதல்ல
ஒருவருக்கு  நம் கண் எதிரே 
 இன்னொருவர் செய்யும் 
அக்கிரமத்தை  பார்த்தும் 
பார்க்காதது போல் எனக்கென்ன 
என்று அதை பற்றிய கவலை 
சிறிதும் இல்லாமல் இருப்பது 
தான் நினைத்தால் அந்த 
அக்கிரமத்தை நடக்க விடாமல் 
செய்திருக்க முடியும் என்ற 
நிலையில் இருப்பவர்கள் 
நமக்கென்ன அவர்கள் எப்படியோ 
போகட்டும் என்று  சொ(செ)ல்வது 
அது அந்த அக்கிரமக்காரனை விட 
ஒரு பங்கு மேலோங்கி நிற்பதாகும்.


தயவு செய்து இது மாதிரி 
குணம் உள்ள நீங்கள் 
உங்களை சிறிதும் காலம் 
தாமதிக்காமல் மாற்றிக்கொண்டு 
உங்களிடம் உள்ள 
நேர்மையானவர்களை  நிம்மதியாக 
வாழ விடுங்கள்! வாழ விடுங்கள் !
நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டியது 
வேறு ஒன்றுமில்லை.
ஏனோ இதை செய்ய 
தயக்கம் காட்டுகிறீர்கள்!